எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா? - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஞ்சித் சிங் என்பவரின் மகனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்து வர ஒரு மினி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மினி பஸ்ஸைத் தர்மேந்திர யாதவ் என்பவர் ஓட்டினார். அவர் விருந்தினர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டுச் சாப்பிடுவதற்காக அமர்ந்தார்.

திருமணம்

சாப்பாட்டில் அவருக்குப் பிடித்தமான பன்னீர் இருந்தது. உடனே கூடுதலாக இரண்டு கரண்டி பன்னீர் போடும்படி தர்மேந்திரா கேட்டார். ஆனால் சாப்பாடு பரிமாறியவர் கூடுதலாகப் பன்னீர் கொடுக்க மறுத்தார்.

இதனால் தர்மேந்திரா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றபிறகும் தர்மேந்திராவிற்குக் கோபம் குறையவில்லை. அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த தர்மேந்திரா மினி பஸ்ஸை ஸ்டார்ட் செய்து திருமண மண்டபத்தின் மீது மோதச் செய்தார். இதில் மாப்பிள்ளையின் தந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

மணமகளின் சித்தப்பாவும் இதில் காயம் அடைந்தார். இச்சம்பவத்தால் சனிக்கிழமை இரவு நடக்க வேண்டிய திருமணம் நின்று போனது. அடுத்த நாள்தான் திருமணம் நடந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திராவைக் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.