Vikatan Nambikkai Awards : `என் வாழ்வின் நம்பிக்கை மனிதர்கள்; தனுஷ் பட அப்டேட் - மாரி செல்வராஜ்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள் விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

இதில், அன்றாட வாழ்வுரிமைக்காக அலுவலகங்களுக்கு அலைவது தொடங்கி, கொத்தடிமைகளாக இருந்து வதைபடும் அப்பாவிகளை மீட்பது வரை அயராது பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றிவரும் தனராஜ்-லீலாவதி இணையருக்கு பூர்வகுடிகளின் நேசர்கள் என டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர் யார்?’

`இயக்குநர் ராம்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர் யார்?’

`என் மகன். என் குழந்தைகளை எப்படி வளர்ந்து, இந்த சமூகத்துக்கான முக்கியமான மனிதர்களாக மாறினால் நான் சரியாக இருந்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைவேன்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர்கள்?’

`எனக்கு நம்பிக்கை விதைத்த மனிதர்களை என் வாழ்வில் தினமும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பெயர்கள் தெரியாது. அவர்கள் அன்பை, நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். நான் செயல்பட உந்து சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கான நம்பிக்கை மனிதர்கள்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர்கள்?’

`சில இளைஞர்கள் சமூக மாற்றத்துக்காக உரையாட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள்தான் எனக்கான நம்பிக்கை இளைஞர்கள்.’

பைசன், தனுஷ் பட அப்டேட்..?

`` `பைசன்’ முடிந்துவிட்டது. நானும் தனுஷ் சாரும் இணைந்து அடுத்து படம் பண்றோம். எளிமையான கதையைப் பெருசா பண்ணப்போறேன். அதற்கான வேலையைத்தான் அடுத்து ஆரம்பிக்கப்போறேன்.”

விகடன் நம்பிக்கை விருது விழாவின் முழுமையான தொகுப்பு கீழே இருக்கும் லிங்க்கில்...!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.