ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் உங்க கையைக் கடிக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
ஒவ்வொரு வருஷமும் பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கான தேதி வர்றப்போ ஒரே ஷாக்கா இருக்கா? வயித்துல புளியைக் கரைக்குதா? நாம எப்படி ஃபீல் பண்ணாலும் சரி, அது வருஷா வருஷம் தொடர்ந்து வரக்கூடிய செலவுதான்.
பெற்றோர்கள் பயப்படுவதற்கு காரணம் உண்மையில் ஃபீஸ் கிடையாது. ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கு முன்கூட்டியே திட்டமிடாமல் இருப்பதுதான் அந்தக் காரணம். உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி, கீழ்க்கண்ட 3 டிப்ஸ் ஃபாலோ பண்ணீங்கன்னா உங்களோட தலைவலி பாதியா குறைஞ்சிடும்!
டிப் நம்பர் 1: உண்மையை ஏத்துக்கணும்!
வருஷா வருஷம் ஃபீஸ் கட்டப்போறதுன்னு ஆகிப்போச்சு. அதைப் பார்த்து பயப்படுறதுலயோ, டென்ஷன் ஆவுறதுலயோ ஒரு பயனும் இல்ல! எனவே, உங்க பிள்ளையின் ஸ்கூல் ஃபீஸ் வருஷத்துக்கு ₹60000-னு வெச்சுப்போம். மாசாமாசம் ₹5000 ரூபாயை அதுக்காக இந்த மாசத்துலேர்ந்தே ஒதுக்கி வெச்சிருங்க...
டிப் நம்பர் 2: சின்னதா சேமிக்க ஆரம்பிக்கலாமே!
நிறைய பேர் முதல் டிப்ஸ் படிச்சதும், காசு இருந்தா நான் ஏன் இந்தக் கட்டுரையை படிக்கிறேன்னு கேட்பீங்க, உண்மைதான்! உங்களால ஒரு வருஷத்துக்கான முழு தொகையை சேமிக்க முடியலைனாலும், குறைந்தபட்சம் 500-1000 ரூபாய் சேமிக்கலாமே! ஒரு வருஷம் கழிச்சி 6000-12000 ரூபாய் உங்க கைல இருக்கும்!
இந்தச் சிறிய சேமிப்பை நீங்க ரிஸ்க் குறைவான லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இல்லைனா வங்கி ரெக்கரிங் டெப்பாசிட்டில் போடலாம். உங்க பேங்க் அக்கவுண்ட்லேர்ந்து ஆட்டோமேட்டிக்கா இந்தப் பணம் சேமிப்பிற்கு போகுற மாதிரி இருக்கணும். ஃபீஸ் கட்டும் நேரம் வர்றப்போ இது உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

டிப்ஸ் 3: நிதி சார்ந்த தவறுகளைச் செய்யாதீங்க
ஃபீஸ் கட்ட, கடன் வாங்குவது, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது இல்லைனா உங்க நீண்ட கால சேமிப்பை பயன்படுத்துவது அப்போதைக்கு நிலைமையை சமாளிக்குமே தவிர அது தீர்வு கிடையாது. கடன் வட்டியை அதிகரிக்கும், வட்டி மேலும் கடன் வாங்க வைக்கும். அதிக கடன் எப்போதும் நம்மை மன அழுத்தத்திலேயே வைச்சிருக்கும்.
நண்பர்கள்கிட்ட கடன் கேட்கும்போது நாம எவ்ளோ கஷ்டப்படறோம்னு நமக்குத்தான் தெரியும்! யாருக்கோ கடன் கட்ட ரெடியா இருக்குற நாம சேமிக்க மட்டும் ஏன் தயங்குறோம்? யோசிச்சு பார்த்தா ரெண்டுமே ஒண்ணுதான். புத்திசாலித்தனமா முடிவெடுப்பது உங்க கையிலதான் இருக்கு!
இதுமாதிரி இன்னும் நிறைய டிப்ஸ் வேணுமா? லாபம் நடத்தும் வெபினாரில் கலந்துக்கோங்க!
பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் மட்டுமில்ல, நிதி சார்ந்த எந்த விஷயத்துக்கும் நிறைய சம்பாதிக்கணும்னு அவசியம் இல்ல. எல்லாத்துக்கும் ஒரு பிளான் இருக்கு, அதைக் கத்துக்கிட்டு தொடர்ந்து செயல்படுத்தினாலே போதும்!

சேமிப்பது எப்படி? அதை முதலீடு செய்வது எப்படி? கல்விக் கட்டணம் முதல் பிள்ளைகளின் மேற்படிப்பு வரை ஸ்மார்ட்டாக பிளான் செய்வது எப்படி? எல்லாத்தையும் தெரிஞ்சுக்க விகடன் லாபம் நடத்தும் பள்ளி/கல்லூரி கட்டணம், எளிமையாக கட்டுவது எப்படி? வெபினாரில் மறக்காம கலந்துக்கோங்க! (குழந்தைகள் பெற இருக்கும் இளம் தம்பதிகளும் கலந்துக்கலாம்).
நாள்: ஏப்ரல் 27, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி
பேச்சாளர்கள்: கிருபாகரன், நிறுவனர், www.moneykriya.com & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்

150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். கட்டணம் ஏதுமில்லை. முதலில் ரெஜிஸ்டர் செய்யும் 50 பேருக்கு மட்டும் குழந்தைகளின் மேற்படிப்புக்கான திட்டமிடல் புளூபிரிண்ட் வழங்கப்படும்.
முன்பதிவுக்கு: https://forms.gle/FaaDmPo3mQxnQ58b8
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


