Ex DGP: மிளகாய் பொடி தூவி முன்னாள் காவல்துறை அதிகாரி கொலை; மனைவி, மகள் கைது!

கர்நாடக முன்னாள் காவல்துறைத் தலைவர் ஓம் பிரகாஷின் கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் மகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

பெங்களூருவின் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் வசித்து வந்தவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் (68). கடந்த ஞாயிற்றுக்கிழமை உடலின் பல இடத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ex dgp om prakash family

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையில் ஓம் பிரகாஷின் மகன் கார்த்திக் பிரகாஷ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், ``என் தாயும், தங்கையும் இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதாக உறுதியாக சந்தேகிக்கிறேன். கடந்த வாரத்தில் மட்டும் 4 முறை என் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே என் தந்தை வீட்டிலிருந்து எங்கள் அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரண்டு நாள்களுக்கு முன்பு என் தங்கை கிருதிதான் அப்பாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தார்." என்றார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

 ex dgp om prakash
ex dgp om prakash

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியில், சம்பவத்தன்று மதியம் ஓம் பிரகாஷும் அவரின் மனைவி பல்லவியும் சொத்து விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது பல்லவி மிளகாய்பொடியை அவர்மீது வீசி, பாட்டிலால் தாக்கியிருக்கிறார். அவரைக் கட்டிவைத்து, கொலை செய்திருக்கிறார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பல்லவி, மற்றொரு காவல் அதிகாரியின் மனைவியிடம் தன் கணவரைக் கொன்றுவிட்டதாகப் பேசியிருக்கிறார். இந்த தகவல்கள், மகன் கார்த்திக் பிரகாஷின் புகாரின் அடிப்படைபடையில் காவல்துறை அதிகாரிகள் பல்லவியையும் அவர்களது மகளையும் கைது செய்திருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.