`திருமண நாள் அன்றே எங்கள் குட்டி தேவதையை வரவேற்கிறோம்’ - மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிஞ்சு விரல் புகைப்படத்தை பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு விஷ்ணு விஷால் அறிமுகமானார். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். கடைசியாக அவர் நடிப்பில் `லால் சலாம்’ திரைப்படம் வெளியானது.

இதற்கிடையே விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக விஷ்ணுவும், ரஜினியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Baby Girl

அதன் பின்னர் இவர் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதி நான்காம் ஆண்டு திருமண நாளில் தங்களின் பெண் குழந்தையை வரவேற்கின்றனர்.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக குழந்தையின் கைவிரல்களின் புகைப்படத்தை x பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

We are blessed with a BABY GIRL..
Aryan is an elder brother now...

Its our 4th wedding anniversary today...
On the same day we welcome this gift from the Almighty...

Need all your love and blessings.... @Guttajwala pic.twitter.com/vSAPVMXKN8

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 22, 2025

தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் தன்னுடைய முதல் மகன் ஆரியன் அந்த குழந்தையை பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.