Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்? - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ டைரி ஆஃப் எ சிஇஓ என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்? உறவுகள் கைவிடுவதற்குப்பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது போன்ற விஷயங்களை அலசுகிறது.

சமந்தா லைக் வீடியோ

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ பகுதியில், ``624% அதிகமான ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் துணையை விட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட துணையை அங்கேயே தங்கி கவனித்துக்கொள்கிறார்கள் என்றப் புள்ளிவிவரம் குறித்த விவாதிக்கப்பட்டது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 60,000 லைக்குகளைப் பெற்று வைரலானது. இந்த வீடியோவை நடிகை சமந்தா லைக் செய்திருக்கிறார்.

ஆனால், இதுதொடர்பாக தனிப்பாட்ட எந்தக் கருத்தையும் சமந்தா பதிவு செய்யவில்லை. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது 2022-ம் ஆண்டில், சமந்தா ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸுடன் போராடி வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் இந்த வீடியோவை சமந்தா லைக் செய்திருப்பது சமூக ஊடகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.