ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! - உறையூர் குங்குமவல்லி கோயில் விளக்கு பூஜை; அனுமதி இலவசம்; முழு விவரம்
ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்!
2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி கோயிலில் விளக்குப் பூஜை. கலந்து கொள்ளுங்கள்!
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
தாயாக வந்து ஈசனே சோழ அரசி காந்திமதியின் பிரசவம் பார்த்த திருத்தலம் திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.
இதனால் இங்கு ஈசனே அம்பிகையின் வடிவமாகவும் இருக்கிறார். இங்குள்ள அம்பிகை குங்குமவல்லி. பெயருக்கு ஏற்றாற்போல பெண்களின் மாங்கல்யத்தைக் காக்கும் தேவியாக மங்கல நாயகியாக விளங்குகிறாள்.
இவளை விளக்கேற்றி வழிபட்டால் மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி குறையின்றி நடக்கும்.
இங்கு நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் காட்சி தருகிறார்கள். இங்கு 27 வகை மூலிகைகளுடன் மிளகாய் சேர்த்து தில்லை காளிக்குச் செய்யப்படும் சிறப்பு ஹோமத்தில் கலந்துகொண்டால் எதிரி தொல்லை, தீவினை, நோய்ப் பாதிப்புகள் விலகும்.

இங்கு தை மாதம் 3-ம் வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் அன்று, குங்குமவல்லிக்கு வளைகாப்புத் திருவிழா 3 நாள்கள் நடைபெறும்.
விழா முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் வேண்டியும், 2-ம் நாளன்று திருமணமான பெண்கள் மகப்பேறு வேண்டியும், 3-ம் நாளில் கன்னிப் பெண்கள் நல்ல வரன் கிடைக்க வேண்டியும் வளையல்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
பிறகு இந்த வளையல்கள், பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் அம்பாள் பிரசாதமாகத் தரப்படும். இதுவே இங்குச் சிறப்பான வழிபாடாக உள்ளது.
இங்கு வந்து தான்தோன்றீஸ்வரரை வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருமணம், குழந்தைப்பேறு வேண்டி இங்கு வந்து வணங்கினால் தீர்வு நிச்சயம் என்கிறார்கள்.
வேண்டியதை வேண்டியவாறே அருளும் இந்த குங்குமவல்லி அன்னையைத் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும்.
கவலைகள் தீரும் திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; குங்குமவல்லியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.
இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது.
மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்குத் தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைப்பேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


