கடலூர்: தந்தையின் இறுதிச்சடங்கில் காதலியை மணந்த மகன்; நெகிழ வைத்த திருமணத்தின் பின்னணி என்ன?
கடலூர் மாவட்டம், கவணை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் – கண்ணம்மாள்.
இவர்களின் மகன் அப்புவும், அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர்.
அப்பு சட்டப் படிப்பு முடித்திருக்கும் நிலையில், விஜயசாந்தியும் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தங்கள் காதல் குறித்துப் பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர்.
அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில் அப்புவின் தந்தை செல்வராஜுக்கு நேற்று முன் தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு அவர் உயிரிழந்தார். அதையடுத்து நேற்று 18-ம் தேதி மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறுவதாக நேரம் குறிக்கப்பட்டது.
உறவினர்கள் அனைவரும் அங்குக் கூடியிருந்த நிலையில், காதலி விஜயசாந்தியைத் தன்னுடைய தந்தையின் முன்பு திருமணம் செய்துகொள்ள விரும்பினார் அப்பு.
அதையடுத்து தாலியைத் தன்னுடைய தந்தையின் கைகளில் வைத்து எடுத்து, காதலியின் கழுத்தில் கண்ணீருடன் கட்டினார் அப்பு. இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் அப்பு – விஜயசாந்தி தம்பதியை வாழ்த்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


