Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் பெரும்பாலானோர், ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள்.
ஒருசிலர் வார விடுமுறை தினங்களில், ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று, அங்குள்ளவற்றை புகைப்படம் எடுத்து, அதை இணைய செயலிகளில் பதிவிட்டு மகிழ்வார்கள்.
தற்போது நிறைய பேர் vlogs என்று யூடியூபில் சேனல் தொடங்கி வீடியோ பதிவிட்டு பணமும் சம்பாதிக்கிறார்கள். இப்படியாக சுற்றுலா செல்வதை நம் ஆழ்மனதில் ஒரு மகிழ்ச்சி செயலாக பதிய வைக்கிறார்கள்.
வலி நிறைந்த நிமிடங்கள்
உண்மையில் நம் வசிக்கும் இதே உலகில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை என்பது அதிகம். அவர்கள் எப்போதாவது தான் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெறுகிறார்கள் (சிலருக்கு அதுவும் கிடைப்பதில்ல).
எளிய குடும்பத்தில் பிறந்தவன், தன்னுடைய பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் அழைத்து செல்லும் ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கு 500 ரூபாய் கொடுக்க முடியாமல், வேனில் அமர்ந்திருக்கும் அவனது நண்பர்களை வழியனுப்பி வைக்கும் நிமிடங்களின் வலியை யாருக்கும் தெரியாமல் தன்னுள்ளே புதைத்திருப்பான்.
அப்படிப்பட்ட இளைஞனின் வாழ்வில் கல்லூரி படிப்பை முடிக்கும் போது, நூலகம் என்ற ஒன்றில் இலவசமாக புத்தகம் படிக்கலாம் என்பதை அறிந்து கொள்கிறான்.

கால பயணம்
பின் நூலகம் என்ற ஒரு இடத்தில் அமர்ந்து உலகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களுக்கும், உலகின் கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளையும், நாட்டின் வரலாற்றையும், உலக தலைவர்களின் வாழ்க்கையும், அறிவியல் உண்மைகளையும் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்கிறான்.
கால பயணம் செய்து, சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் உரையாடி, பல விதமான அனுபவங்களை நூலகத்தின் மூலம் பெறுகிறான்.
எஸ்.ரா
எல்லோரும் ஊர் ஊராய் சென்று பெற்ற அனுபவங்களை, செல்ல முடியாத நபர்கள் புத்தகங்களின் வாயிலாக பெறுகிறார்கள். தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள, "தேசாந்திரி" நூல் சென்னை முதல் சாரநாத் வரை அவர் சென்ற வரலாற்று சிறுப்பு மிக்க இடங்களையும், அவருக்கு கிடைத்த அனுபவங்களையும் 41 கட்டுரைகளாக தந்துள்ளார்.
அதே போல் அவர் எழுதிய மற்றொரு கட்டுரை நூலான "இலக்கற்ற பயணி", உலகில் அவர் சென்ற பல்வேறு இடங்களில் உள்ள சிறப்புகளையும் அவர் அனுபவித்த உணர்வுகளையும் எழுத்தின் வழியே நம்மையும் உணர வைக்கிறார். இப்படியாக பல்வேறு நூல்கள் நமக்கு நிறைய நினைவுகளை பரிசாய் தருகின்றன.

நூலகம் செல்லுங்கள்
ஆதலால் வெவ்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியவில்லை என்று வருந்தாதீர்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உங்கள் வீடு அருகே செயல்படும் நூலகத்திற்கு சென்று, பல்வேறு வகைகளில் உள்ள புத்தகங்களை எடுத்து வாசியுங்கள், நீங்களும் உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று பிடித்த மனிதர்களுடன் அறிமுகமாகி மகிழுங்கள்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


