``எங்களையே எதிர்த்து பேசுவியா? - சிறைக்குள் கைதியை தாக்கிய 5 காவலர்கள் சஸ்பெண்டு

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் நிஜாமுதீன் என்ற நபரை குற்ற வழக்கு ஒன்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைதியாக அடைத்துள்ளனர். சிறை காவலில் இருந்த நிஜாமுதீனுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

சிறை காவலர்களான எங்களையே எதிர்த்து பேசுவியா என ஆத்திரமடைந்த சிறை காவலர்கள் 5 பேரும் கூட்டாகச் சேர்ந்து இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

காவல்துறையினரின் இந்த கொடூரத் தாக்குதலில் நிஜாமுதீனின் கைகளில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. கடுமையான காயங்களுடன் சிறையில் துடிதுடித்துக் கிடப்பது குறித்து அவரின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

Jail

அதன் அடிப்படையில் கூடலூர் மாஜிஸ்திரேட், கூடலூர் தாசில்தார், உதவி காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவினர் கூடலூர் கிளை சிறையில் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கைதி நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கியதை உறுதி செய்துள்ளனர்.

விசாரணைக்குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கூடலூர் கிளை சிறைச்சாலை காவலர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

துறை ரீதியான நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.