பனங்கிழங்கை பார்த்து பதறிய அதிகாரி! - சவுதி பயண அனுபவம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சவூதி அரேபியாவில் இருக்கும் என் மகள் குடும்பத்தாரின் நீண்ட கால கோரிக்கையான எனது சவூதி பயண அழைப்பை உடல் ஒத்துழைக்காவிட்டாலும் அங்குள்ள புண்ணிய தலங்களான மெக்கா, மதீனாவை பார்க்க வாய்ப்பு கிடைக்குதே என்ற சந்தோசத்தில் `தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் அபூர்வமாக ஒப்புதல் அளிப்பது போல ஏற்றுக்கொண்டேன்..

சவூதி என்றாலே மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடு என்று கேள்விப்பட்டு இருந்ததால், அந்நாடு பற்றிய தகவல்களை ஏதோ நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல படித்து வைத்திருந்தேன்.

நான் தனியாக போகாமல் அங்கு வேலை செய்யும் யாஸர் என்ற என் உறவுக்காரர் ஒருவரோடு செல்ல இருந்ததால், `யாஸர் இருக்க பயமேன்?’ என ரிலாக்ஸாக கிளம்பினேன்.

நான் கொஞ்சம் `முன் எச்சரிக்கை முத்தண்ணா ரகம்’ என்பதால் எனக்குரிய லக்கேஜ்களை குறிப்பிட்ட எடைக்குள் இருக்கிறதா என்று எங்கள் வீட்டிலுள்ள தராசில் ஒன்றுக்கு மூன்று முறை ஏற்றி செக் செய்து கொண்டேன்.

சில கறார் அதிகாரிகளிடம் சிக்கினால் ஒரு கிலோ அதிகமாக இருந்தால் கூட நாம் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு கட்டணத்தை போட்டு தீட்டி விடுவார்களாம்.

மேலும் எந்த பெட்டியில் என்னென்ன பொருள் இருக்கிறது என்ற லிஸ்ட்டை செல்லில் போட்டோ எடுத்து வைத்திருந்தேன்.

செக்கிங் நேரத்தில் ஸ்கேனரில் பார்த்து சந்தேகப்பட்டு கேட்டால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

நான், மகள், மருமகன் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்களே என்று மஞ்சள் உப்பு சேர்த்து அவித்த பனங்கிழங்கை கொண்டு சென்றிருந்தேன். பெட்டியை ஸ்கேனில் பார்த்ததும் வெடிகுண்டை கொண்டு செல்வதை பார்த்ததை போல ஒரு வடஇந்தியா அதிகாரி அலறவும், நல்ல வேலையாக அங்கிருந்த ஒரு தமிழகத்தை சேர்ந்த அதிகாரி, ``நத்திங்! இட் இஸ் ஈட்டபில் ஒன் என்று அவரிடம் விளக்கிய பின்னரே எனக்கு மூச்சு வந்தது.

எனவே இது போன்ற வித்தியாசமான பொருட்களை கொண்டு சொல்ல முயற்சிக்காதீங்க. மேலும் கசகசா போன்ற நம் சமையலறை பொருள் அரேபியாவில் போதை பொருளாம் , எனவே இது போன்ற விஷயங்களில் வெளிநாடு செல்வோர் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வடிவேல் போல வாலண்டியராக வண்டியில் ஏற வேண்டிய நிலை வரும் !

நாங்கள் சவுதிக்கு நேரிடையாக செல்லாமல் துபாய் வழியாக சென்றோம். துபாயில் இறங்கி 4 மணி நேரத்துக்கு பின்னரே சவூதிக்கு விமானம். இடைப்பட்ட நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் பசிக்காக ஒரு பர்கரும் ஜூஸும் குடித்ததற்கே நம்மூர் பணத்திற்கு 800 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்துச்சு .

நம்ம ஊரு ரோட்டுக் கடையில் வயிறார சாப்பிட்டாலும் 60 ரூபாய்க்கு மேலாகாது. அப்படி பழகிய நமக்கு இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்துச்சு. இது போல் இரு விமானம் மாறி டூர் போகிறவர்கள் கைவசம் ஸ்நாக்ஸ் பிரெட் போன்றவற்றை வைத்து கொள்வது நல்லது.

இரவு தமாம் நகரில் போய் இறங்கியதும் எங்களை வரவேற்க என் மருமகன் காரில் வந்திருந்தார். அங்கிருந்து நாங்கள் செல்ல வேண்டிய அல் ஜுபைல் என்ற நகரம் 100 கிலோமீட்டர்.

இடையில் ஒரு பெட்ரோல் பல்க்கில் நிறுத்தி, ஒரு பாகிஸ்தானி ரெஸ்டாரன்டில் இரவு உணவை முடித்தோம் .

நடு இரவிலும் சுடச்சுட ரொட்டியும் மட்டன் கிரேவியும்ஒரு பிளாக் டீயும் கிடைத்தது . அது நடுங்கவைக்கும் பிப்ரவரி மாத குளிரில் உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமாக இருந்துச்சு. அங்கு ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ஆண் பெண்களுக்கென நிறைய பளிச் மற்றும் சுத்தமான கழிவறைகளும் தொழுகை நேரங்களில் தொழுவதற்கென பள்ளி வாசலும், நான்கைந்து கடைகளுமாக தூய்மை அரேபியாவாக காட்சியளித்தது.

அங்கிருந்த ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை கடற்கரை பீச்,மால்கள் பூங்காக்கள் ஓட்டல்கள் மீன் மார்க்கெட் பேரன் பேத்திகளோடு வயதையும் மறந்து விளையாடியது மெய்யழகன் படத்தை பார்த்தது போன்ற மென்மையான நிறைவான உணர்வை தந்தது.

மக்கா மதீனவிற்கு ஒவ்வொரு வியாழன் அன்றும் ஜுபைலில் இருந்து ஆம்னி பஸ்கள் கிளம்பினாலும் என் உடல் நிலை கருதி மருமகன் என்னை விமானத்திலும் மேக் இன் சீனாவின் டீலக்ஸ் ரயிலிலுமாக டூ இன் ஒன்னாக அழைத்து சென்றார்.

முதன் முதலாக மெக்கா புனித தளத்திற்குள் நுழைந்ததும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரவசத்தையும் பக்தியையும் உணர்ந்தேன். அந்த பரவசம் சிறிதும் குறைவில்லாமல் மதீனாவிலும் தொடர்ந்தது.

நான் ஒவ்வொரு முறையும் மருமகன் செலவு செய்யும் போதும் நம்மூர் பணத்திற்கு அது எவ்வளவு, இது எவ்வளவு என்று கேட்பதை பார்த்து மருமகன் சவூதி ரியாலையும் நம்மூர் ரூபாயையும் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால் ஒரு டீ கூட குடிக்க மனசு வராது.

அதனால ஊரு போகும்வரை நம்மூர் ரூபாயில் கணக்கிடுவதை மறந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்.

அரேபியாவில் காணும் இடமெல்லாம் அரேபியர்களாகவே இருப்பார்கள் என்று எண்ணியிருந்த நான் இந்தியர்களுக்கிடையே அரேபியர்களும் வாழ்கிறார்கள் என்று உண்மையை உணர்ந்தேன். அந்த அளவுக்கு எங்கு சென்றாலும் இந்தியர்களே நிறைந்து இருந்தார்கள்.

நடுத்தர வர்க்க மனிதனான நாமும் விமானம் ஏறுவோம் என்று கனவில் கூட எண்ணியிராத நான் ஐந்து ஆறு விமானங்கள் ஏறி இறங்கியதை என்னால் நம்பவே முடியவில்லை .

அதற்காக விமான பயணம் என்றால் ஆஹா ஓஹோ என்று எண்ணி விடாதீர்கள் .மொத்தத்தில் எனக்கு அது ஒரு பறக்கும் நம்ம ஊரு ஷேர் ஆட்டோ பயண உணர்வையே தந்தது. அவ்வளவு நெருக்கமான சீட்கள். பக்கத்து சீட் ஆசாமி எழுந்து இடம் தந்தால் தான் நாம் கழிவறைக்கே செல்ல முடியும்.

என் பயணத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் பல்வேறு நிறைவுகளை பெற்றவனாக என் அரேபிய பயணத்தை இறைவன் அருளால் நிறைவேற்றி திரும்பினேன்.

-எ.முகமது ஹுமாயூன்

நாகர்கோவில்

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.