Resignation: இப்படித்தான் நடத்தப்பட்டேன் - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும் நேருக்கு நேராக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழிலதிபர் ஏஞ்சலா இயோவின் வைரல் பதிவில் தொழிலாளர் ஒருவர், "நான் கழிப்பறை காகிதத்தைப்போல தேவைப்பட்டபோது பயன்படுத்தப்பட்டேன். தேவை முடிந்ததும் மறு சிந்தனை இன்றி தூக்கி எறியப்பட்டேன்" எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த வார்த்தைகள் தனது நினைவை விட்டு அகல மறுப்பதாகவும், அது வலியை ஏற்படுத்துவதுடன், பணியிட கலாசாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வையுங்கள். நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேறவேண்டும், மன கசப்புடன் அல்ல" என எழுதியுள்ளார்.

"பாராட்டுவதுதான் ஒருவரைத் தக்கவைப்பதற்கான. அதுதான் அவர் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல, அவர் யார் என்பதற்காகவும் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டும்" என்றும் சேர்த்துள்ளார்.
வைரல் Resignation
இந்த பதிவுடன் கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை இணைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்ந்தெடுத்தேன். நான் வெளியேறுகிறேன்" என எழுதியுள்ளார்.

இந்தப் பதிவுக்கு லின்க்ட் இன் பயனர்கள் வேறுபட்ட கருத்துக்களை கமண்ட் செய்து வருகின்றனர். சிலர் அந்த நிறுவனத்துக்கு சரியான பதிலடி என்கின்றனர். சில அந்த ஊழியர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் பிரச்னை இருக்காது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ராஜினாமா நாடகத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், மனிதர்களை நடத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


