900 KIA கார் இன்ஜின்கள் காணாமல் போனது எப்படி? அதிர வைக்கும் திருட்டு!
900 கார் இன்ஜின்கள்: காணாமல் போனது எப்படி? அதிர வைக்கும் திருட்டு!
கண்முன்னே மண்ணை தூவுவது என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதனை சம்பவமாக பார்த்திருக்க மாட்டோம். கார் இன்டஸ்ரியில் நாட்டிலேயே இது புது மாதிரி திருட்டு. அப்படி என்னன்னு தான்னே கேட்குறீங்க. சொல்றோம்.
ஆந்திராவில் உள்ள சத்யசாய் மாவட்டத்தில் பெனுகொண்டா அருகில் அமைந்துள்ளது கியாவின் கார் தயாரிப்பு தொழிற்சாலை. தென்கொரியா கார் கம்பெனியான KIA 2019 முதல் இங்கு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மார்ச் 18, கியா நிறுவனம் ஆந்திர காவல்துறையை அணுகினர். என்ன புகார் என்றால் 900 இன்ஜின்கள் தங்கள் தொழிற்சாலையில் இருந்து காணாமல் போனதாகவும் அதனை ஆண்டு தணிக்கையில் கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டனர். அதிர்ந்த காவல்துறை முறையான புகார் அளிக்குமாறு கியா நிறுவனத்திடம் கேட்டு கொண்டனர்.
அடுத்த நாள் புகாரை பதிவு செய்து ஆய்வு செய்த காவலர்கள் முதல்கட்டமாக, இந்த திருட்டானது கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றதையும் இதில் நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் நிறுவன ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் தொழிற்சாலையில் இருந்து ஒரு குண்டூசி கூட நிர்வாகத்துக்கு தெரியாமல் வெளியே போக முடியாத நிலையில், ஆச்சரியான இந்த திருட்டின் பின்னணியில் நிச்சயம் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்ஜின்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுசெல்லும்போதோ அல்லது நிறுவனத்துக்கு உள்ளேயோ திருட்டு நடந்திருக்கலாம்.
ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் கார்கள் உற்பத்தியாகும் இந்த தொழிற்சாலையில், 900 இன்ஜின்கள் திருட்டு போனது பெரிதாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என கியா மோட்டார்ஸ் தெரிவித்தாலும் 900 இன்ஜின்கள் என்பது பெரிய கணக்குதான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


