Travel Contest: ஆப்பிரிக்க கடற்கரையின் உல்லாசப்போக்கிடத்திற்கு ஒரு கப்பல் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நான் மேற்கு மத்திய ஆப்ரிக்காவில் வேலை செய்வதால் என்னை காண எனது மனைவியும் , இரு குழந்தைகளும் வந்திருந்தனர். அவர்களுக்கு வாழ்வில் இனிய நினைவுகளை ஏற்படுத்த எண்ணினேன்.

அன்று இனிய வெள்ளிக்கிழமை. வானும் மேகமும் உறவாடிக்கொண்டே மிதமான காதல் சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலை வேலையில் என் குடும்பத்தின் பயணம் தொடங்கியது.

இன்றளவும் இந்திய துணைக்கண்டத்தில் , அதுவும் தமிழகத்தில் இந்த எழில் மிகு “என்ன ஜப்பானா” எனத் தொடங்கி , பின்னர் “ஒ கபானா” (gabon) எனச் சுரத்தை குறைவுடன் உச்சரிக்கப்படும் மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான கெபானின் நியோனி எனக்கூறப்படும் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய உல்லாசப் போக்கிடத்திற்குச் செல்ல ஆயத்தமானோம்.

காலையில் எட்டு மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பி அரைமணி நேரத்திற்கு பிறகு படகு கிளம்பும் இடத்திற்கு சென்றடைந்தோம்

படகு காலை ஒன்பது மணியளவில் கிளம்ப வேண்டியது , சிறிது காலத்தாமத்தை இன்னும் சில பயணிகள வராமையால் ஏற்படுத்தி கொண்டிருந்தது.

ஒருவாறாக ஐ.நா-வின் தடுப்பூசி குழுவினருடன் எங்களது படகுபயணம் துவங்கியது். நாங்கள் அனைவரும் ஓவென்டோ கடற்கரையில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நியோனி தீவில் உள்ள உல்லாசப் போக்கிடத்திற்குச் செல்ல ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது.

அமைதியான , ஆர்பரிக்காத கடல் அலைகளின் வழியே பயணித்து கொண்டிருந்தோம் சீரிய படகு இயந்திரத்தின் காரணமாக கடல் நீர் நம்மை வரவேற்கும் வகையில் தொட்டு பார்த்துச் சென்றது.

எனது பெரிய மகள் தன்னுடன் கொண்டு வந்திருந்த மிட்டாயை எனக்கு கொடுத்தாள். நான் படகில் பயணித்து கொண்டிருந்த மற்ற நான்கு பயணிகளுக்கும் கொடுக்க விழைந்தேன்.

அனைவரும் மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொண்டனர் அவ்வேளையில் அப்படகில் பயணித்த வயதான பெண் மறுபடியும் கையை நீட்டினாள். அவள் பேசும் மொழி புரியாததால் இன்னொரு மிட்டாயை அவள் கையில் திணிக்க எத்தனித்தேன்.

அவளோ அந்த மிட்டாயை நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் படகை ஏந்திச் செல்லும் கடல் அன்னைக்கு சமர்ப்பிக்கச் சொன்னாள். அந்த கெபானிய பெண் , நம்மை ஏந்திச்செல்லும் கடல் அன்னைக்கு நன்றியை தெரிவிக்க சொன்னதைக் கண்டு வியந்தேன். அதையும் என் கையாலே செய்யச் சொன்னதை என்றென்றும் நினைவு கூறத்தக்கது.

முக்கால் மணி நேர பயணத்திற்குப்பின், தீவு நெருங்குகிறதை அறிவிக்கும் வகையில் அலையாத்தி காடுகள் எங்களை வரவேற்றன. அலையாத்தி மரங்களின் வேர்கள் இயற்கையின் அதிசயங்களாய் எனது மனதில் பட்டது. ஒருவாறாக மணி நேர பயணத்திற்குப்பின் படகு கரை ஒதுங்கியது. நாங்கள் குடும்பத்துடன் தீவில் காலடி வைத்தோம்.

எங்களுக்காக காத்திருந்த ஜீப்பில் ஏறினோம். அந்த தீவில் ஒரு சில வீடுகளே இருந்தன. மீண்டும் ஆள் அரவமற்ற காட்டில் ஒரு மணி நேர பயணம். பயணத்தின் ஊடே, முன்பின் தெரியாத பாதையில் அத்துவானக்காட்டில் , நீண்டபாதையின் திசை அறியாமல் காட்டு பாதையின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்தபடி, குடும்பத்தோடு தனிமையை உணர்ந்தபடி சென்றோம். ஏனென்றால் கைபேசி இணைப்பு , இணைய இணைப்பு கிடைக்காது.

மதியம் பனிரெண்டு மணியளவில் உல்லாசப்போக்கிடத்தை வந்தடைந்தோம். உரிமையாளர் எங்களை வரவேற்று குளிர்பானம் மற்றும் வேர்க்கடலை வழங்கினார். கடற்கரையை ஒட்டிய எண்ணிக்கையில் குறைவான, மனித நடமாட்டமற்ற விடுதிகள். அன்று வெள்ளிக்கழமை என்பதால் , எங்களுடன் இரு ஆங்கிலேய குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.

கொண்டு வந்திருந்த ரசப்பொடியை கொண்டு என் மனைவி உற்சாகத்துடன் ரசம் செய்தாள். நாங்கள் சைவம் எனபதால் ரொட்டி, அரிசி சாதம் மற்றும் காய்கறி சாப்பிட்டோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின், ஐந்து மணியளவில் காட்டு விலங்குகளை காண திறந்தவெளி ஜீப்பில் சென்றோம் காட்டை பல வழிகளில் சுற்றிப்பார்த்து யானை மற்றும் காட்டெருமைகளை கண்டு ரசித்தோம்.

இரவு உணவுக்கு பின் கடற்கரை விடுதியில் ஆழ்ந்த உறக்கம் மறுநாள் சனிக்கழமை காலையில் ஏழு மணியளவில் கடலில் குளிக்கச்சென்றோம். விடுதியின் காவல் நாய், எங்களை கடற்கரை வரை விட்டுச் சென்றது. நண்டுகள் பொதிந்த கடற்பாறைகளில் நண்டுகளின் ஓட்டத்தை கண்டு ரசித்தோம்.

அமைதியான ஆரவாரமில்லாத கடலில் குளிப்பது சுகமாக இருந்தது. கடலை ஒட்டிய நன்னீர் ஓட்டத்திலும் குளித்து மகிழ்ந்தோம். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லாமல் எனது குடும்பத்தினர் மட்டுமே இயற்கை அன்னையை அணுஅணுவாக ரசித்த காட்சி வாழ்வில் மறக்க முடியாதது.

மதியம் உணவு உண்டபின் மீண்டும் தனிமையான காட்டு பயணம். மற்றும் கடல்பயணம். சனிக்கிழமை என்பதால் இருபது பேர் கொண்ட கூட்டத்தை காணமுடிந்தது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.