எங்களுக்குள் பேசிக்கொள்வோம்; ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி...- கட்சி விவகாரம் பற்றி அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ராமதாஸ், அன்புமணி

தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமக-வில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்13) ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு செய்தார் அன்புமணி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்.

அன்புமணி
அன்புமணி

அதே நேரத்தில் மருத்துவர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலுடன் அவர்களின் கொள்கையை நிலைநாட்டி பாமகவைத் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.