IPL களத்தில் புதிய ரோபோ நாய்; ஓடும், குதிக்கும், பேசும்... பெயர் வைத்து மகிழும் ரசிகர்கள்!
ஐபிஎல்-ன் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த உயிரற்ற சக ஊழியரை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வரவேற்றுள்ளது IPL நிர்வாகம்.
அந்த வீடியோவில் முன்னாள் நியூசிலாந்து வீரரும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான டேனி மோரிசன், இந்த ரோபோ நாயை அறிமுகப்படுத்தினார்.
ஐபிஎல் 2025ல் இனி வரப்போகும் போட்டிகளை கவர் செய்ய இந்த ரோபோ உதவவிருக்கிறது. இதற்காக வெளியிட்ட வீடியோவில், "ஊரில் புதிய ஐபில் குடும்ப உறுப்பினர் வந்துள்ளார்" என உற்சாகமான பதிவிட்டுள்ளனர்.
"இதனால் பேச முடியும், ஓட முடியும், நடக்க முடியும், குதிக்க முடியும் முக்கியமாக, இதயத்தில் இருந்து புன்னகையை வரவழைக்க முடியும்." எனக் கூறியுள்ளனர்.
இது முற்றிலும் புதிய பார்வையில் ஐபிஎல் போட்டிகளை வழங்கும். வீடியோவில் மோரிசனின் குரல் கட்டளைகளுக்கு இந்த ரோபோ செவிமடுத்தது.
இதில் கண்காணிப்பு மற்றும் ஒளிபரப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
!
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
It can walk, run, jump, and bring you a heart(y) smile ❤️
And...A whole new vision
Meet the newest member of the #TATAIPL Broadcast family - By @jigsactin
P.S: Can you help us in… pic.twitter.com/jlPS928MwV
இந்த ஜாலியான நாய்க்கு புரொமோஷனாக, இதற்கு பெயர் வைக்க ரசிகர்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் கமண்ட் செக்ஷனில் தங்களுக்கு விருப்பமான பெயர்களைச் சொல்லி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


