ரீல்ஸில் பிரபலமாகும் teeth whitening strips நல்லதா, கெட்டதா? – மருத்துவர் விளக்கம்!

சில நாட்களாக பல்லை வெண்மையாக்குவதற்கான டீத் வைட்னிங் ஸ்ட்ரிப்ஸ் ( teeth whitening strips) என்பவை ரீல்ஸ்களில் அதிகம் வருவதை நாம் பார்த்திருப்போம். அவற்றை நாம் வீட்டிலேயே பயன்படுத்தலாமா; யாரெல்லாம் பயன்படுத்தலாம்; இவற்றைப் பயன்படுத்தினால் ஏதேனும் பாதிப்புகள் வருமா என்பனக் குறித்து திருப்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் மித்ரா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

teeth whitening

அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரில் ஃபுளுரைடு அதிகமாக இருப்பதினால், சின்ன வயதில் இருந்தே சிலபேருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். அவர்கள் சிரிக்கவோ, மற்றவங்களோட பேசவோ கூச்சப்படுவார்கள். கையால் வாயை மறைத்து மறைத்துப் பேசுவார்கள். அதனால், அவர்கள் ‘டீத் வைட்னிங்’ செய்வாரள். கல்யாணம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்காகவும், கர்ப்பகாலங்களில் எடுத்துக்கொள்ளும் மாத்திரையினால் பல் மஞ்சளாக மாறியவர்களும், அதிகமாக புகைபிடிப்பதினால் பல் மஞ்சளாக இருப்பவர்களும் இதை பயன்படுத்துவார்கள்.

பல்லில் எனாமல் (enamel), டென்டின் (dentin) மற்றும் பல்ப் (pulp) எனப்படும் மூன்று லேயர்கள் இருக்கின்றன. டீத் வைட்னிங் ஸ்ட்ரிப்ஸில் இருக்கிற மிதமான ப்ளீச்சிங் ஏஜென்ட்களான ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கார்பமைடு பெராக்சைடு இரண்டும் பற்களை வெண்மையாக்கும். அவை பல்லின் எனாமல் லேயரில் சென்று பல்லின் கறையைக் குறைக்கும்.

teeth whitening
teeth whitening

பற்களை வெண்மையாக்க ப்ளீச்சிங் என்ற சிகிச்சை செய்வோம். அதைவிட ஈசியான முறைதான் இந்த டீத் வைட்னிங் ஸ்ட்ரிப்ஸ். பொதுவாகவே எந்த விஷயமும் மருத்துவருடைய ஆலோசனை இல்லாமல் எடுப்பது பாதுகாப்பானது கிடையாது. அது இதற்கும் பொருந்தும்.

இதில் ப்ளீச்சிங் ஏஜென்ட் கொஞ்சம் சேர்த்திருப்பதால், குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானது கிடையாது. 14 வயதுக்குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைத்திருக்கும். அப்படி பற்கள் விழுந்து முளைத்தப்பிறகும் பற்கள் மஞ்சள் நிறத்திலேயே இருந்தால் இதை பயன்படுத்தலாம். பொதுவாக, இதை14 வயதுக்கு மேல் பயன்படுத்தலாம்.

பல் மருத்துவர் மித்ரா
பல் மருத்துவர் மித்ரா

இது பற்களை வெண்மையாக்குவதற்கான நிரந்தரத் தீர்வு கிடையாது. அதனால், எந்த மருத்துவரிடம் சென்றாலும் இதை நீண்ட நாளுக்குப் பரிந்துரைக்க மாட்டார்கள். நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பவர்கள், வெனீர் சிகிச்சை (Veneers treatment) செய்துகொள்ளலாம்.

நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாகப் பாதிப்புகள் வரும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஹைட்ரோஜென் பெராக்சைடு பயன்படுத்தும்போது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறினார் பல் மருத்துவர் மித்ரா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.