திருமணம் மீறிய உறவு: நேரில் பார்த்த கணவர் செய்த விபரீதம்.. உ.பி-யில் அதிர்ச்சி

திருமணம் தாண்டிய உறவுகளால் பல குடும்பங்கள் பிரிவினையை சந்தித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவத்தில் மனைவியின் காதலன் மர்ம உறுப்பை கணவன் கடித்து குதறிவிட்டார்.

திருமணம் மீறிய உறவு

கான்பூரில் உள்ள பாபுபுர்வா என்ற இடத்தில் வசிக்கும் 30 வயது நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியிடம் தான் வேலைக்கு செல்வதாகவும், இரண்டு நாள் கழித்துதான் வருவேன் என்று கூறிவிட்டு வெளியூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் இரண்டு நாள் கழித்து வருவதற்கு பதில் ஒரே நாளில் வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் அவரது ஆசை மனைவி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்டார்.

அவர் வந்ததை பார்த்த மனைவியின் காதலன் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவரை பிடித்த பெண்ணின் கணவர், காதலனின் மர்ம உறுப்பை கடித்துக் குதறிவிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு கூடினர். இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து மர்ம உறுப்பு காயம் அடைந்த நிலையில் இருந்த காதலனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து யாரும் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்த பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் அமைதியாக செல்லும்படியும், பிரச்னைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் திவேதி குறிப்பிட்டார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.