வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அறிவியல் சொல்லும் எளிய காரணம் இதான்!
அறிவியலால் பதில் கிடைக்கும் வரை மனிதர்களால் விளக்க முடியாத நிகழ்வுகளால் நிறைந்துள்ளது இந்த பிரபஞ்சம்.
பல விஷயங்கள் குறித்து ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் விண்வெளி கருப்பாக இருந்த போதிலும், வானம் மட்டும் ஏன் நீல நிறமாக உள்ளது என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம் வானத்தைப் பார்க்கும்போது அது நீல நிறத்தில் காணப்படும். இந்த வானத்தின் நிறம் "ரேலீ சிதறல்" (Rayleigh scattering) என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வின் காரணமாகத் தென்படுகிறது. உண்மையாகவே வானம் நீல நிறமா என்று கேட்டால் இல்லை!
வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?
1870 களில் இது பற்றி ஆங்கில விஞ்ஞானி லார்ட் ரேலீ ஆய்வு செய்தார். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, அது ஊதா நிறத்திலிருந்து சிவப்பு வரை பல்வேறு வண்ணங்களின் ஒளி அலைகளால் வருகிறது.
ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அலைநீளம் உள்ளது. அதேசமயம் நீல ஒளி நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியுடன் ஒப்பிடும்போது குறுகிய அலைநீளத்தைக் கொண்டுள்ளது.
சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் மற்ற நிறங்களை விட அதிகமாகச் சிதறுகிறது. காரணம் அது குறுகிய அலைநீளங்களைக் கொண்டுள்ளது.
நீலம் மற்றும் ஊதா போன்ற குறுகிய அலைநீள ஒளி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீளங்களை விட மிகவும் திறம்படச் சிதறடிக்கப்படுகிறது. ரேலீயின் கண்டுபிடிப்புகள்படி, நீல ஒளி அதன் குறுகிய அலைநீளத்தால் சிவப்பு ஒளியை விட ஒன்பது மடங்கு அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இதனால் சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும்போது நீல மற்றும் ஊதா நிறங்கள் வானம் முழுவதும் பரவுகின்றன. வானத்திற்கு என்ன சொந்த நிறம் இல்லை. ஆனால் ஒளி பரவல் காரணமாக அது நீல நிறத்தில் தோன்றுகிறது.

விண்வெளி கருப்பாகத் தோன்றுவது ஏன்?
விண்வெளியில் வளிமண்டலம் இல்லை. எனவே ஒளி சிதற வாய்ப்புகள் இல்லை.
பரந்த விண்வெளியில் சூரிய ஒளியானது காற்று மூலக்கூறுகளின் எந்த குறுக்கீடு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.
எனவே ஒளியே சிதறடிக்க எதுவும் இல்லாததால் அனைத்து வண்ணங்களும் ஒன்றாக இருக்கின்றன. எனவே விண்வெளி நமக்குக் கருப்பாகத் தோன்றுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


