காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற முஸ்கான் கர்ப்பம்; சிறையில் மருத்துவ சோதனை
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வந்த செளரப் ரஜபுத்தை கடந்த மாதம் அவரது மனைவி முஸ்கான் மற்றும் காதலன் சாஹில் இருவரும் சேர்ந்து படுகொலை செய்தார். அதோடு உடலை பல துண் டுகளாக வெட்டி டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இப்போது நீதிமன்ற காவலில் இருக்கும் இருவரும் தங்களை ஒன்றாக அடைக்கவேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து பக்கத்து பக்கத்து அறையிலாவது அடையுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதால் முஸ்கானை சந்திக்க ஒரு முறையாவது அனுமதிக்க வேண்டும் என்று சாஹில் கேட்டுக்கொண்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையில் முஸ்கானுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முஸ்கான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 4 முதல் 6 வார கர்ப்பமாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது முஸ்கான் தனது கணவனை கொலை செய்து விட்டு காதலனோடு சிம்லாவிற்கு சென்று மகிழ்ச்சியாக இருந்தபோது முஸ்கான் கர்ப்பமாகி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

முஸ்கான் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு சிறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும், தேவையான சத்தான உணவுகள் கொடுக்கப்படும் என்றும், அடிக்கடி மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படும் என்று மீரட் சிறை அதிகாரி விரேஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
முஸ்கான் கைது செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தில் இருந்து வந்து இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. முஸ்கானுக்கும், அவரது கணவருக்கும் பிறந்த குழந்தை இப்போது முஸ்கானின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
ஆனால் அக்குழந்தைக்கு செளரப் பெற்றோரும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறார். இப்போது முஸ்கானுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் அதனை யார் பராமரிப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


