Travel Contest: ஒரே இடத்தில் 108 திவ்ய தேசங்களின் தரிசனம்; இராமானுஜர் சிலை தந்த ஆன்மீக அனுபவம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
உறவினரின் வீட்டில் நடைபெற்ற ஒரு சிறிய விழாவின் பொருட்டு ஹைதராபாத் செல்ல வேண்டியிருந்தது. கோவையிலிருந்து ஹைதராபாத் வரை ரயிலில் செல்ல நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், விமானத்தில் செல்லலாம் என முடிவு செய்தோம்.
கோவையில் காலை விமானம் ஏறி, ஹைதராபாத் தரையிறங்குகையில், விமானத்தின் ஜன்னல் வழியாக இராமானுஜர் Statue of Equality தெரிந்தது.
ஹைதராபாத்திற்குப் பலமுறை சென்றிருந்தாலும், பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருந்தாலும், இந்த இடத்திற்குச் சென்றதில்லை.
விமானத்தில் அமர்ந்தபடியே, இந்த முறை எப்படியாவது இங்குச் சென்றுவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன்.
உறவினரின் வீட்டு விசேஷம் நல்லபடியாக முடிந்தவுடன், மாலை நேரத்தில் இராமானுஜர் சிலை இருக்கும் இடத்திற்குச் சென்றோம்.
புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிலை இருக்கும் இடத்திற்குச் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. மாலை நேரம் என்பதால் ஹைதராபாத்தின் வெப்பம் குறைந்து, இதமான வானிலை இருந்தது.
பெரியவர்களுக்கு 250 ரூபாய் டிக்கெட் உள்ளே நுழைய.
காலணிகள், செல்போன்கள் எவற்றிற்கும் உள்ளே அனுமதியில்லை. எல்லாவற்றையும் அதனதன் கவுன்டர்களில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
வெளியிலிருந்து பார்க்கவே அந்த இடம் ரம்மியமாக இருந்தது. அழகான வேலைப்பாடுகளுடன், சிலையைச் சுற்றி கோபுரங்கள். வைணவத் தலங்களான 108 திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் காணலாம். திருவரங்கத்தில் ஆரம்பித்து பரமபதத்தில் முடிவடைகிறது கோவில்கள்.

ஒவ்வொரு கோவில் போன்ற அமைப்பிலும், அந்தந்த கோவிலில் மூலவர் சிலை எப்படியிருக்குமோ, அப்படியே அவற்றின் சிறிய வடிவ சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அலங்காரங்களும் அற்புதமாகச் செய்திருந்தார்கள்.
ஒவ்வொரு கோவிலின் பக்கவாட்டிலும் அந்தக் கோவிலில் இருக்கும் பெருமாளின் பெயரையும், தாயாரின் பெயரையும் , கோவில் விமானம் எந்த வகை என்பதைப் பற்றியும் ஒரு சிறிய Display-வில் காண்பிக்கிறார்கள். தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் இருக்கின்றன.
எல்லோராலும் எல்லா திவ்யதேசங்களுக்குச் சென்று வர முடியுமா எனத் தெரியாது. ஆனால் இங்கு வந்தால், குறைந்தது 108 திவ்ய தேசங்கள் எவை, அங்கெல்லாம் சுவாமி எப்படி இருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு எல்லா திவ்ய தேசங்களைப் பார்த்ததில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருவுருவம் மிகவும் கவர்ந்தது. நான் இதுவரை திருவனந்தபுரம் சென்றதில்லை.
நாங்கள் சென்ற தினம் இராம நவமி. இராமர் பிறந்த நாள். 108 திவ்ய தேசங்களில் அயோத்தியும் ஒன்று. இராமரை அயோத்தியாவிற்கே சென்று தரிசித்த உணர்வு மேலோங்கியது.
அங்கே விநியோகிக்கப்பட்ட பானகம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். 108 திவ்ய தேசங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் , இராமானுஜரின் சிலை.
ஏழு மணி முதல் அங்கு ஆரத்தி நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. கீழ் படியிலிருந்து மேல் படி வரை சிறுவர்கள் நின்று ஆரத்தி எடுக்கிறார்கள்.
பின்னணியில் ஒலிக்கும் இசை அருமை, ஆரத்தி நிகழ்ச்சி முடிந்தவுடன், நடன நிகழ்ச்சியும் இருந்தது. நம்மைச் சுற்றி இருக்கும் விளக்குகள் அணைக்கப்பட்டு, இராமானுஜர் சிலைக்கு ஆரத்தி எடுப்பதும், அதையடுத்து நடனமும் கண்களுக்கு விருந்து.
இந்த நிகழ்ச்சியைக் காண வருபவர்களுக்கு ஏராளமான நாற்காலிகள் அங்கிருக்கும் fountain அருகே வைத்திருக்கிறார்கள்.

இரவில் விதவிதமான நிறங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அந்த fountain மிளிருகிறது. இது ஏதோ ஒரு தனி உலகம் என்ற நினைப்பு கண்டிப்பாக அங்கிருந்தால் நமக்குத் தோன்றும்.
இந்த வித்தியாசமான அனுபவம் பெற இதைப் படிக்கும் நீங்கள் அனைவரும் இங்கே ஒருமுறை வந்து பாருங்கள்.
பிரகாரத்தைச் சுற்றி வருகையில் ஆங்காங்கே தண்ணீர், பிரசாதம் ஆகியவைக் கிடைக்கின்றன. வளாகத்தினுள்ளேயே ஒரு ஃபுட் கோர்ட்டும் இருக்கிறது.
உள்ளே சென்று 108 திவ்ய தேசங்களைப் பார்த்தவுடன்தான் எனக்குத் தெரிந்தது, இதுவரை நான் திருப்பதி, திருவரங்கம், காஞ்சிபுரம், தவிர மற்ற திவ்யதேசங்களைப் பார்த்தது இல்லை என.
முடிந்தால் இங்கே தெற்கில் உள்ள அனைத்துக் கோவில்களையும், அங்கே வடக்கில் பத்ரிநாத்தையும், அதையும் தாண்டி முக்திநாத்தையும் பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்திருக்கிறேன்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


