Kia Cars: உற்பத்தி ஆலையில் 900 கார் எஞ்சின்கள் திருட்டு.. எப்படி நடந்தது? ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் கியா கார் நிறுவனத்தில் 5 ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியானத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள பெனுகொண்டாவில் கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கொஞ்சம், கொஞ்சமாகத் தொடர்ந்து 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கியா கார்

இது தொடர்பாக மார்ச் 19 அன்று உள்ளூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது," இந்த தொடர் திருட்டுகள் 4 முதல் 5 ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டும், இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள், மற்ற நகரங்களுக்கு விற்பனைக்காகவோ அல்லது அசம்பிள் செய்யவோ மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எடுத்துச்செல்லப்பட்ட ஒவ்வொரு என்ஜினும் சுமார் 150 கிலோ எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கால மற்றும் தற்போதைய ஊழியர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

கியா கார் உற்பத்தி தொழிற்சாலை
கியா கார் உற்பத்தி தொழிற்சாலை

இவ்வளவு பெரிய அளவிலான முறைகேடு இவ்வளவு காலமாக கவனிக்கப்படாமல் எப்படி இருந்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, சி.சி.டி.வி காட்சிகள், தளவாட பதிவுகள் மற்றும் ஊழியர்களின் நடமாட்ட பதிவுகளை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக, மூன்று குழுக்களை அமைத்துள்ளோம்" என்று கூறியிருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.