சிக்கன் பிளேவரில் டூத் பேஸ்ட் அறிமுகப்படுத்திய KFC நிறுவனம் - இதன் விலை என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியா பல் பராமரிப்பு நிறுவனமான ஹிஸ்மைல் (Hismile) நிறுவனத்துடன் இணைந்து கேஎஃப்சி நிறுவனம் சிக்கன் பிளேவரில் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதினோரு மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களால் இந்த டூத் பேஸ்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. கேஎஃப்சி ஒரிஜினல் ரெசிபியை கொண்டு வறுத்த கோழி துண்டை கடிப்பதைப் போல் இந்த டூத் பேஸ்ட் இருப்பதாக கூறுகின்றனர்.

$13 (ரூ. 1,123) விலை கொண்ட இந்த பற்பசையை ஹிஸ்மைல் வலைதளத்தில் மட்டுமே வாங்க முடியுமாம். இதுமட்டுமல்லாமல் KFC பிராண்டின் மின்சார பல் துலக்குதலையும் பெறலாம். இதன் விலை $59 (சுமார் ரூ. 5,097) ஆகும். இது கேஎஃப்சி பிரியர்களை வாங்க தூண்டுகிறது.

இதற்கு முன்பு இந்த கேஎஃப்சி நிறுவனம் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியது. யூகேவில் மட்டும் கிடைக்கும் இந்த வாசனை திரவியம் $ 13.82 ( சுமார் ரூ.1,200) விலையில் 100 மில்லி லிட்டர் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.