சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி வேன் டிரைவர் கைது!

சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``தன்னுடைய மகள் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவார். வேனை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆறாம் வகுப்பு மாணவிக்கு வேன் டிரைவர் வினோத் தினமும் சாக்லேட் கொடுத்து வந்திருக்கிறார். பின்னர், `ஐ லவ் யூ என கூறி மாணவியின் கையைப் பிடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மாணவிக்கு செல்போனில் அடிக்கடி மெசேஜை அனுப்பி வந்திருக்கிறார்.

போக்சோ

இந்தச் சூழலில்தான் கடந்த 19.3.2025-ம் தேதி மாணவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார் வினோத். அப்போது அங்கு யாரும் இல்லாததல் மாணவியை நிர்வாணமாக்கியதோடு அவரிடம் தவறாக நடந்திருக்கிறார். இந்தத் தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மாணவியை வினோத் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். இந்தநிலையில் மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரிடம் கடந்த 9-ம் தேதி தனக்கு நடந்த கொடுமைகளை கூறியிருக்கிறார். எனவே டிரைவர் வினோத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.