இந்திய ரிசர்வ் வங்கி குறைத்த ரெப்போ - வங்கி கடன் வட்டியை குறைப்பதற்கான டிப்ஸ்!

இந்த ஆண்டு கடன் வாங்கியிருப்பவர்களுக்கு குஷியான தொடக்கம்தான் போல.

ஆண்டின் தொடக்கத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 பேஸ் பாயின்ட்டுகள் குறைக்கப்பட்டன. இப்போது 50 பேஸ் பாயின்ட்டுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதுவும், வீட்டுக் கடனை ப்ளோட்டிங் வட்டியில் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு ப்ளஸ்ஸோ ப்ளஸ்.

இந்த சலுகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன்.

"2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 50 பேஸிஸ் புள்ளிகள் குறைத்துள்ளன. இதனால், ரெப்போ வட்டி விகிதம் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் பலனைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை இதோ...

நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன்

வங்கிக்கு செல்லுங்கள்

முதலில் நீங்கள் கடன் வாங்கியிருக்கும் வங்கிக்கு சென்று உங்களது கடன் வகைக்கும், ரெப்போ வட்டிக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா, அப்படி இருந்தால் வட்டி விகிதம் குறையுமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் தானாக குறைந்துவிடும்.

ஒருவேளை இல்லையென்றால், நீங்கள் மாதா மாதம் சரியாக கட்டியிருக்கும் பேமென்ட் ஹிஸ்டரியை காட்டி நீங்கள் கடன் வாங்கி இருக்கும் வங்கியிடம் பேசி வட்டி விகிதத்தை குறைக்க வழி பாருங்கள்.

இன்னொரு ஆப்ஷன்!

ரெப்போவிற்கும் உங்கள் கடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றால், சம்பந்தம் இருக்கும் கடனுக்கு மாற பாருங்கள். இந்த முடிவை எடுக்கிறீர்கள் என்றால் எந்த வங்கியில் ரெப்போ வட்டி விகிதத்தை எடுத்துகொள்ளும்போது குறைவான வட்டி தருகிறார்களோ அந்த வங்கியை தேர்ந்தெடுங்கள்.

மேலும், அந்த வங்கியின் வட்டி விகிதங்கள், நடைமுறைகள் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்.

கடனை குறைக்க...இந்த மூன்றும் செய்தால் நல்லது!
கடனை குறைக்க...இந்த மூன்றும் செய்தால் நல்லது!

இந்த மூன்றும் செய்தால் நல்லது

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த பாருங்கள்;

முடிந்தால், கடனில் அசல் தொகையை கொஞ்சம் கட்டப்பாருங்கள். அப்போது உங்கள் கடன் தொகை குறையும்;

கடன் கட்டாமல் விட்ட எந்தவித அபராதமும் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.

இந்த மூன்றும் பக்காவாக செய்துவிட்டால் நீங்கள் வங்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதோ அல்லது புதிய கடனுக்காக இன்னொரு வங்கியை அணுகும்போதோ உங்களை வங்கிகள் மிகவும் பாசிட்டிவாக அணுகும்.

இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கும் இந்த சலுகையை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில் தான் நம்முடைய லாபம் இருக்கிறது. அதனால், தெளிவாக பேசி முடிவு எடுங்கள்" என்று கூறினார்.

ரெப்போ வட்டி விகித குறைப்பிற்கு பிறகு, நாம் எப்படி வட்டியில் லாபம் அடையலாம் என்கிற ஒப்பீடு இதோ...

ஒப்பீடு அட்டவணை
ஒப்பீடு அட்டவணை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.