திருப்பத்தூர்: மார்பிங் போட்டோ அனுப்பி பாலியல் தொல்லை; பதறிப்போன பள்ளி மாணவி - 5 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கலையரசன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவரிடம் சமூக வலைதளம் வழியாகத் தொடர்பு கொண்டு பேசிப் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், மாணவியின் போட்டோவை மார்பிங் மூலம் நிர்வாணமாக சித்திரித்து, தனது நண்பர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறார் கலையரசன். மாணவிக்கும் அந்தப் போட்டோக்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி வந்திருக்கிறார் கலையரசன்.
அதிர்ச்சிக்குள்ளான மாணவி, இந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். கொதித்தெழுந்த பெற்றோர் உடனடியாக ஆலங்காயம் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். `போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கலையரசன் மற்றும் அவரின் நண்பர்களான பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், சந்தோஷ் மற்றும் மேலும் இரண்டு சிறார்கள் உட்பட மொத்தம் 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


