இந்தியாவிற்கு வருகை தரும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக்!
ஏப்ரல் 8 ஆம் தேதி துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வரும் துபாய் பட்டத்து இளவரசர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் முன்னதாக ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடியுடன் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் மேற்கொள்ளும் சந்திப்பில் இருநாட்டு உறவு உட்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்த உள்ளதாகவும் பிரதமர் மோடி துபாய் இளவரசருக்கு மத்திய விருந்து அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் ஒன்பதாம் தேதி மும்பையில் நடைபெற உள்ள இந்தியா-ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்களின் கூட்டத்தில் பட்டத்து இளவரசர் ஷேக் பங்கேற்க உள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


