தனுஷ்கோடியில் இருந்து கச்சத்தீவு வரை ரசிக்க ஓர் சூப்பர் ஸ்பாட்! எங்கே இருக்கிறது தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி ஒரு காலத்தில் தொழில் செய்யும் நகரமாக இருந்தது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அந்த நகரமே கடலில் மூழ்கியது.

அதன்பின்னர் அங்கு எஞ்சி இருக்கும் பழைய தேவாலயம், ரயில் நிலையம், தபால் நிலையம் போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து வருகின்றனர்.

கடலின் அழகையும், மண்ணில் புதைந்து கிடக்கும் கட்டிடங்களையும் ரசிக்க ஆயிரக்கணக்கானோர் தனுஷ்கோடிக்கு வருகின்றனர். அழிந்த நகரம் ஒரு திகிலூட்டும் சுற்றுலா தலமாக மாறி பலரையும் ஈர்த்து வருகிறது.

இந்த தனுஷ்கோடியில் மற்றொரு சிறப்பான இடமும் உள்ளது. அதுதான் அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம். மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான பாக் ஜலசந்தி பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.

அதேபோல அங்கிருந்து சில மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு தென்படும். சிறிய அளவில் தெரியும் கச்சத்தீவு அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த கலங்கரை விளக்கத்தில் நீங்கள் அனுபவிக்கும் காட்சியை, நேரத்தை உங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இரண்டு பக்கங்களுலும் கடல் சூழ நடுவில் இருக்கும் சாலையில் வாகனங்கள் செல்வதும், கடலில் படகுகள் மிதப்பதும் என பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எனவே தனுஷ்கோடியில் இருக்கும் இந்த இடத்தை மிஸ் செய்து விடாதீர்கள்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.