குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நிஷாந்த் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் செல்லத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து ஆனந்தி கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். வறுமையான குடும்பச்சூழல் காரணமாக மகளை உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்து வருகிறார்.

பாண்டீஸ்வரன்

ஆனந்தி வீட்டில் அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரன்(33) சேர்ந்து வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனந்தி வீட்டில், மதுபோதைக்கு அடிமையான அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரன் அடிக்கடி அக்காவிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தார்.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் நள்ளிரவில் அக்கா ஆனந்தியை எழுப்பி மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனந்தி பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் இரும்பு கம்பியால் ஆனந்தியின் தலையில் கடுமையாக தாக்கியதில் மயங்கினார்.

தூங்கி கொண்டிருந்த நிஷாந்த் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அம்மா தாக்கப்பட்டு கிடந்ததால், மாமாவிடம் சண்டை போட்டுள்ளார். ஏற்கெனவே மதுபோதையில் இருந்த பாண்டீஸ்வரன், நிஷாந்த்தையும் இரும்பு கம்பியால் தாக்கினார். தலையில் அடிபட்டதில் அதிக ரத்தம் வெளியேறி நிகழ்விடத்திலேயே நிஷாந்த் உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் மதுபோதை தெளிந்த பாண்டீஸ்வரன் தான் செய்த தவறை உணர்ந்து, அக்காவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிஷாந்த்

அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெரியகுளம் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பாண்டீஸ்வரன், நிசாந்த் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையால் அக்கா மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.