`மார்பக வளர்ச்சி; Transgender ஆக மாறுமா? - டீன் ஏஜ் சிறுவனின் அச்சம் சரியா? | காமத்துக்கு மரியாதை

டீன் ஏஜில், உடலில் நிகழ்கிற சில சிறிய பிரச்னைகள்கூட நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் பெரிதாக தோன்றலாம். அந்த சிறுவனுடைய பிரச்னையும் அப்படிப்பட்டதுதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த கேஸ் ஹிஸ்டரி பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

teen age boy

அந்த சிறுவனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கலாம். அவனுடைய அப்பாவுடன் என்னை சந்திப்பதற்காக வந்திருந்தான். ஆள் நல்ல வளர்த்தியாக கொழுகொழுவென்று இருந்தான். அவனுடைய பிரச்னையும் அதுதான். சிறுவன் கொழுகொழுவென்று இருந்ததால், மார்பும் நார்மலைவிட சற்று பெரிதாக வளர்ந்திருந்தது. அதை, அவனுடைய நண்பன் ஒருவன் கிள்ளி விளையாட வீட்டில் வந்து சொல்லியிருக்கிறான். உடனே அதுபற்றி பள்ளிக்கூடத்தில் புகார் செய்து அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார், என்னை சந்திப்பதற்கு வந்திருந்த சிறுவனின் அம்மா.

இன்னொரு நாள், தன்னுடைய அம்மாவிடம் என்னோட செஸ்ட் கேர்ள்ஸ் மாதிரி இருக்கிறதால நான் ட்ரான்ஸ்ஜென்டர் ஆயிடுவேனாம்மா என்று கேட்டிருக்கிறான். பயந்துபோன அவனுடைய அம்மா, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு அருகேயுள்ள டாக்டரை பார்க்க சொல்லியிருக்கிறார். அவர், இவர்களை என்னிடம் அனுப்பி வைத்திருந்தார்.

பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்
பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்

டீன் ஏஜுக்குள் நுழையும்போது, அதுவரை குழந்தைகளாக இருந்த சிறுவர்கள் திடீரென்று ஓங்குதாங்காக வளர ஆரம்பிப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் விரைகள் பெரிதாவது, அக்குள் மற்றும் ஆணுறுப்பைச் சுற்றி முடி வளர்வது, மூக்குக்குக் கீழே லேசாக நிறம் மாற ஆரம்பிப்பது என மெள்ள மெள்ள வளர்ந்த ஆணாக மாற ஆரம்பிப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக சில சிறுவர்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும். அதை கைனகமேஸ்டியா (Gynecomastia) என்போம். இந்த சிக்கல் இருக்கிற சிறுவர்கள் வீட்டு ஹாலுக்குள் சட்டை மாற்றக்கூட கூச்சப்பட்டுக்கொண்டு பெட்ரூமுக்குள் செல்வார்கள். இவர்கள் வளரும்போது உடற்பயிற்சி செய்வதற்குகூட சட்டையைக் கழட்ட தயங்குவார்கள்.

என்னிடம் வந்த அந்த சிறுவன் ஏதோ யூ டியூபில் பார்த்துவிட்டு, செஸ்ட் பெருசானா நான் ட்ரான்ஸ்ஜென்டர் ஆயிடுவேனா அங்கிள் என்றான். இதுல கொஞ்சம்கூட உண்மையில்லடா. உன்னோட பிரச்னைக்கும் அந்த விஷயத்துக்கும் மெடிக்கலா எந்த கனெக்‌ஷனும் கிடையாது. நீ வளர வளர அந்தப்பகுதியில கூடுதலா இருக்கிற கொழுப்பு குறைஞ்சி நீ நார்மலா ஆகிடுவே என்று அவனுக்கு புரிகிறபடி அவனை சமாதானப்படுத்தினேன்.

Sexologist Kamaraj

அதன்பிறகு அவனுடைய அப்பாவிடம், ஒருவேளை உங்கள் மகனுடைய மார்பில் பால் சுரப்பிகள் வளர்ந்திருந்தால், அவனுடைய 22 வயதுக்கு மேல அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கி விடலாம். தற்போது, அந்த அறுவை சிகிச்சையை செய்தால் மறுபடியும் மார்பக வளர்ச்சி ஏற்படலாம் என்று தெளிவுப்படுத்தினேன் என்கிறார் டாக்டர் காமராஜ்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.