மியான்மர் நிலநடுக்கம்: 1,644-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 3,500 பேர் படுகாயம்- தொடரும் மீட்பு பணி!

நேற்று முன்தினம் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் தாய்லாந்து, சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

ஆனால், மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பக்கத்து நாடு தாய்லாந்து தான். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டடங்கள் இடிந்து விழுதல், சாலைகளில் விரிசல், ரயில், விமானங்கள் அசைதல் என மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக பயங்கரமானதாக இருந்தது.

தரவுகள் கூறுவது என்ன? 

இதுவரை வெளியாகி உள்ள தரவுகளின்படி, மியான்மரில் 1,644-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3,500 பேர் படுகாயமடைந்துள்ளனர். 139 பேர் பற்றிய எந்த தகவலும் இல்லை.

உதவும் நாடுகள்!

நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், மின்சார தடை போன்ற காரணங்களால் இந்த பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

இந்தியா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு மீட்புப் பணியாளர்கள், உணவு போன்றவற்றை அனுப்பி உதவி வருகின்றன. மேலும், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.