திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டதாகவும் தாலுகா போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் நிலப்பிரச்னையில் தொடர்புடையவர்களை அழைத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

உடல்களை தேடி தீயணைப்பு வீரர்கள்

சந்தேகமடைந்த போலீஸார் நேற்று காலை முதல் மாலை தீயணைப்புத் துறையினரை வைத்து கிணற்றில் இறங்கி உடல்கள் அல்லது எலும்புக் கூடுகள் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தனர்.

ஆனால் அதற்கான எவ்வித தடயங்களும் அங்குக் கிடைக்கவில்லை. இதனால் அணைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, நிலப்பிரச்னையில் தொடர்புடைய 3 பேர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் க்ச் சந்தேகித்தோம். ஊர்க்காரர்கள் மூலமாகத்தான் கிணற்றில் உடல்கள் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

தேடுதல்

தீயணைப்பு வீரர்கள் 15 அடிக்குத் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றித் தேடினர். ஆனால் அதில் உடல்கள் கொலை செய்து வீசப்பட்டதற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும் நிலப்பிரச்னை விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.