UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார்.
பிப்ரவரி 28, 2008 அன்று சந்தியா பாண்டே என்ற பெண்மணி, ஷி மெடிக்கல் கேர் எனும் தனியார் மருத்துவமனையில் C-section அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குழந்தை பெற்றுள்ளார்.
இந்தியா டுடே தளத்தில், அந்த பெண்ணின் கணவர் அரவிந்த் குமார் பாண்டே அளித்துள்ள காவல்துறை புகாரில் அப்போதிருந்தே அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வருடங்களாக ஏராளமான மருத்துவர்களை அணுகியும் சந்தியாவின் வயிற்று வலிக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
லக்னோ மருத்துவக் கல்லூரியில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதைக் கண்டறிந்ததும் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (KGMU) அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு மார்ச் 26ம் தேதி சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை வெளியில் எடுத்துள்ளனர்.
KGMU செய்தி தொடர்பாளர் சுதீர் சிங் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சை சவாலாக இருந்ததாகவும், வெற்றிகரமாக நிறைவுற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தியா பாண்டே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சந்தியா பாண்டேவின் நீண்ட நாள் வேதனைக்கு சிசேரியன் மேற்கொண்ட டாக்டர் புஷ்பா ஜெய்ஸ்வால் என்பவர்தான் காரணம் என அரவிந்த் குமார் பாண்டே தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


