Ashwin : பவுலர்கள் சீக்கிரம் உளவியல் நிபுணர்களைச் சந்திக்க நேரிடும் - சிஎஸ்கே அஷ்வின் வேதனை

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 10 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சென்னை - மும்பை, கொல்கத்தா - பெங்களூரு, கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டங்களை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் 200+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பவுலர்கள் தரப்பிலிருந்து அஷ்வின் பேசி இருக்கிறார்.

அஷ்வின்

அவர் பேசியிருப்பதாவது, “ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் பவுலர்களுக்கு கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களை நியமித்து ஆலோசனை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். உண்மையில் சில ஆடுகளங்களில் பவுலர்களால் பந்து வீசவே முடியவில்லை.

பவுலர்கள் ஃபுல் டாஸ் மட்டுமே வீச வேண்டி உள்ளது. சிறு வயதில் ஃபுல் டாஸ் வீசினால் ஆடுவது சுலபம் என நாம் எண்ணியது உண்டு. ஆனால், இங்கு பந்தை பிட்ச் செய்தால் அது பேட்டர்கள் ரன் குவிக்கத்தான் உதவுகிறது. அதனால் ஃபுல் டாஸ் வீசிதான் தப்பிக்க வேண்டியுள்ளது.” என கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ரபாடா கிரிக்கெட்டின் பெயரை பேட்டிங் என மாற்றி விடலாம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.