Career: பள்ளி படிப்பும், இந்தத் திறனும் இருந்தால் போதும்; மத்திய அரசின் ஜூனியர் அசிஸ்டன்ட் பணி!

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் (Central Road Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு.

என்ன பணி?

ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் (Junior Secretariat Assistant), ஜூனியர் ஸ்டெனோகிராபர்.

மொத்த காலிபணியிடங்கள்: 209

வயது வரம்பு: ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் பணிக்கு அதிகபட்சமாக 28;

ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு அதிகபட்சமாக 27. (சில பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 - 63,200; ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 - 81,100.

கல்வி தகுதி

கல்வி தகுதி: பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்து தேர்வு, கணினி திறன் தேர்வு.

எழுத்து தேர்வு மே அல்லது ஜூன் மாதம் இருக்கலாம். கணினி திறன் தேர்வு ஜூன் மாதத்தில் இருக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்: online.cbexams.com

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.