``திரைப்படத் துறை பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்.. - எச்சரித்த தெலுங்கானா மகளிர் ஆணையம்

தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாச பாடல், நடனம், வசனங்கள் வெளியிடப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெலங்கானா மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், டோலிவுட்டில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள், நடனங்கள் மற்றும் வசனங்கள் அதிகம் இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.

ஊ சொல்றியா பாடலில் சமந்தா

இதுகுறித்து தெலங்கானா மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

"பல திரைப்படப் பாடல்களில் உள்ள நடனங்கள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் உள்ளதை மாநில மகளிர் ஆணையம் கண்காணித்து வருகிறது.

திரைப்படங்களில் வசனங்கள், பாடல்கள், நடனங்கள் அல்லது பிற விஷயங்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வெளியிடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சூழலில் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

சமூகத்திற்கு நேர்மறையான செய்தியை தெரிவிப்பதும், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும் திரைப்படங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

Sharada Narella

திரைப்படங்களைக் காண்பிப்பதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கத்தை மனதில் கொண்டு, திரைப்படத் துறை சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

இந்த எச்சரிக்கை கவனிக்காமல் செயல்பட்டால், தொடர்புடைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்தப் பிரச்னையில் மக்களும், சமூக அமைப்புகளும் தங்கள் கருத்துகளை மாநில மகளிர் ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.

இந்த விஷயத்தை மகளிர் ஆணையம் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளது.

- விஷால்

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.