Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்! - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான `கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `கணிமா பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இடம்பெறும் திருமண கொண்டாட்டப் பாடல்களின் வரிசையில் இப்பாடலும் இணைந்திருக்கிறது.

Kanima - Retro movie song

இப்பாடலில் சூர்யாவோடு சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடனமாடியிருக்கிறார். இப்பாடல் இன்று வெளியாவதை ஒட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிகழ்ந்தது.

பாடல் வெளியாவதற்கு முன்பு ``இப்பாடலில் நான் நடனமாடுவதற்கான ஆடிஷன் வீடியோ இதோ! என சந்தோஷ் நாரயாணன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், `` யோவ், இவ்வளவு நாள் எங்கையா இருந்த! சப்ரைஸ் பண்ணிட்ட என நகைச்சுவையான பதில் பதிவு ஒன்றைப் போட்டார்.

Kanima - Retro movie song
Kanima - Retro movie song

இதனை தாண்டி சந்தோஷ் நாராயணனின் இந்த நடன பதிவுக்கு நடிகர் சூர்யாவும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதில் கொடுத்திருக்கிறார். அவர், ``கணிமா பாடல் முழுவதும் உங்களைதான் ஜூம் போட்டு பாலோவ் பண்ணினேன் சனா. டான்சராகவும் உங்களைப் பிடித்திருக்கிறது." எனப் பதிவிட்டிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.