Wedding Photoshoot: வண்ண வெடியால் நடந்த விபத்து; காயமடைந்த மணப்பெண்; வைரலாகும் வீடியோ- என்ன நடந்தது?

திருமணம் என்றாலே தி.மு போட்டோ ஷூட், தி.பி போட்டோ ஷூட் என இந்தத் தலைமுறையின் திருமண கொண்டாட்டங்களில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அந்த போட்டோ ஷூட் செய்யும் போது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் அவசியம் என்பதை உணர வேண்டும். அழகுக்காக, ஆசைக்காக, கெத்துக்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக இப்போதைய போட்டோ ஷூட் நிகழ்வுகள் அரங்கேறுகிறது. அப்படி ஒரு நிகழ்வில் நடந்த விபத்து குறித்து புதுமணத் தம்பதிகள் பகிர்ந்திருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருக்கிறது.

View this post on Instagram

A post shared by Vicky & Piya ♡ Luxury Travel Couple (@viaparadise)

கனடாவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் தங்களின் திருமணக் கொண்டாட்டத்துக்காக இந்தியா வந்திருக்கின்றனர். இங்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தவும் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். கணவன் மனைவியை தூக்கும்போது பின்னணியில் வண்ணக் கலர் பறக்கும்படியான வெடி வெடிக்க வைத்து போட்டோ எடுப்பது எனத் தீர்மானிக்கபபட்டது. திட்டமிட்டப்படி கணவன் மனைவியை தூக்கும்போது, வெடி தவறுதலாக, மணப்பெண் மீது வெடித்திருக்கிறது.

இதில், மணமகளின் இடுப்பு படுதியில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை மக்களுக்கான விழிப்புணர்வாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ``உங்கள் நிகழ்வுகளில் வண்ண வெடிகுண்டு பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவே இந்தப் பதிவு. நாங்கள் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினோம், ஆனாலும் ஏதோ தவறு நடந்துவிட்டது. அதனால் நாங்கள் காயமடைந்தோம்." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.