எல்லா வாகனங்களின் டயர்களும் கருப்பு நிறத்தில் இருக்க காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக கார், டூவீலர் பஸ் என எல்லா வகை வாகனங்களின் டயர்களும் கருப்பு நிறத்தில் மட்டும் இருப்பதை பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.
ஆரம்பத்தில் டயர்கள் வெள்ளை நிறத்தில் தான் இருந்துள்ளது. ரப்பரால் உருவாக்கப்பட்ட இது பால் போன்ற வெள்ளை நிறத்தில் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
வெள்ளை நிற டயர்கள் திடமாகவும் இல்லை, நீண்ட நாள்களுக்கு நீடித்து உழைக்கவில்லை,வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் அதற்கு குறைவாகவே இருந்தது. எனவே அதன் பயன்பாடும் குறைய ஆரம்பித்திருக்கிறது.
டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் கார்பன் பிளாக் என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால் நமக்கு இந்த நிறத்தில் டயர்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக தான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.
கருப்பு நிற டயர்கள் விரைவாக சேதம் அடையாது. வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் இதற்கு அதிகமாக இருந்தது. வாகனம் ஓட்டும்போது சூடாகும் காரின் பாகங்களிலிருந்து வெப்பத்தை அகற்ற கார்பன் கருப்பு உதவுகிறது.
கருப்பு நிறம் சாதாரண தேய்மானத்திலிருந்து ஏற்படும் கீறல்கள் மற்றும் அடையாளங்களை மறைக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கருப்பு நிற டயர்களே சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தான் எல்லா வாகனங்களிலும் கருப்பு நிற டயர்களே பயன்படுத்தப்படுகின்றன.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


