கரூர்: தாலிக்கொடியில் கோக்கக்கூடிய தங்க காசுகள், குறைந்த விலையில் - மோசடி பெண் சிக்கிய பின்னணி
கரூர் மாவட்டம், குளித்தலை சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயதாகும் ஆனந்த் என்பவர், குளித்தலை பஜனை மட தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், தாலி சங்கிலியில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் தன்னிடம் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு அவற்றை தருவதாகவும் கூறியிருக்கிறார். இதனால், அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் இருந்த தங்க காசுகளை வாங்கிப் பார்த்துள்ளார். ஆனால், அந்த தங்க காசுகள் போலியாக இருப்பதை அறிந்த அவர், அந்த பெண்ணிடம், என் உறவினர் ஒருவர் இதுபோன்று குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்குவதாகச் சொன்னார். அவரை வரவழைக்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்று சொல்லி, அந்தப் பெண்ணை அங்கேயே இருக்க வைத்திருக்கிறார். இன்னொருபக்கம், உடனடியாக இதுகுறித்து குளித்தலை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த பூங்கொடி (34) என்பது தெரியவந்தது. பின்னர், அவர் போலி தங்க நகைகளை விற்க முயன்றதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த போலி தங்க காசுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளைஞர் ஒருவரிடம் போலி தங்க காசுகளை விற்க முயன்று இளம்பெண் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


