Career: இங்கிலீஷ் Communication skill-ஐ வளர்த்துக் கொள்வது எப்படி?! | சிம்பிள் டெக்னிக்ஸ்

பள்ளிக்கு போகிறோம்... காலேஜுக்கு செல்கிறோம்... வேலை பார்க்கிறோம் - இந்த அனைத்து இடங்களிலும் கம்யூனிகேஷன் திறன் என்பது மிக மிக முக்கியம்.

நாம் என்ன நினைக்கிறோம்?, என்ன செய்யப்போகிறோம்?, நம் திறன் என்ன? என அனைத்தையும் கூற இந்தக் கம்யூனிகேஷன் திறன் தான் உதவும். நேர்காணலுக்கு செல்கிறோமா, அங்கே இந்தத் திறன் இருந்தால் தான் வேலை கிடைக்கும். வேலை கிடைத்துவிட்டதா, சக பயணிகள் அல்லது வாடிக்கையாளர்களிடம் பேச இந்தத் திறன் அவசியம். வேலை எல்லாம் இல்லை... பிசினஸ் செய்கிறோம் என்றாலும் உங்கள் கூட்டாளியுடனோ, கஸ்டமர்களுடனோ பேச கட்டாயம் இந்தத் திறன் தேவை.

இந்த திறன் தேவை... அவசியம்...

கம்யூனிகேசன் திறன் என்பது வெறும் பேசுவது அல்ல. மற்றவர்களை எளிதாக அணுகுவது, பேச வருவதை எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக பேசுவது, எல்லோருக்கும் புரிவதுப்போல பேசுவது என கம்யூனிகேசன் திறனின் உள்ளடக்கம் மிக மிக பெரியது.

நல்லா பேசுவேன் தான்... ஆனா, இங்கிலீஷ் வந்தா சறுக்கிடுவேன் என்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இங்கிலீஷை அறிவாக பார்க்காமல், மொழியாக மட்டும் பாருங்கள். அப்போது தானாக சரளம் வந்துவிடும். இது இங்கிலீஷுக்கு மட்டுமல்ல; அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். ஆக, இந்த தயக்கத்தை உடைக்கும் வழி இவ்வளவு எளிது தான்.

இனி சரளமாக பேசும் டெக்னிக்குகளை பார்ப்போம்...

  • முதலில், கண்ணாடி முன்போ, வீடியோ ரெக்கார்டாகவோ ஐந்து நிமிடங்களுக்கு பேசிப் பாருங்கள். நாட்கள் செல்ல செல்ல... இந்த நிமிடங்களை அதிகரியுங்கள். கண்ணாடியை விட, வீடியோ ரெக்கார்ட் பெஸ்ட் ஆப்ஷன். ஏனெனில், நாம் எப்படி பேசுகிறோம், ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ, எதாவது முன்னேற்றம் இருக்கிறதா போன்றவற்றை எளிதாக சோதிக்கலாம். இப்படி சோதிக்கும் போது, நம் தவறுகளை நாமே சரி செய்துகொள்ளலாம்.

  • நம் சுற்றி இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள், கடைக்காரர் அண்ணன் போன்றவர்களிடம் இருந்து கம்யூனிகேசன் திறனை தொடங்குங்கள். இவர்களிடன் இங்கிலீஷில் பேசுங்கள் என்று சொல்லவில்லை. பிறரை எப்படி அணுகுவது என்ற பயத்தை போக்க, இவர்களிடம் நம் மொழியிலேயே பேசலாம். அப்போது, நம்மால் பேச முடியும் என்கிற நம்பிக்கை பெருகும்.

சரளமாக பேசும் டெக்னிக்ஸ்!
  • எந்த மொழியில் பேசுவதாக இருந்தாலும் வார்த்தைகளை வேகமாக கொட்டாமல் நிறுத்தி நிதானமாக பேசுங்கள். அப்போது, அடுத்து நீங்கள் எதாவது தவறான வார்த்தை பயன்படுத்தப் போனாலும், அதைத் தடுத்துகொள்ளலாம்.

  • எதிரில் இருப்பவர்களை பாஸாகவோ, வாடிக்கையாளர்களோ பார்க்காமல் நண்பர்களாக பாருங்கள். அப்போது வார்த்தைகள் வந்து குவியும். ஆனால், நண்பர்களிடம் பயன்படுத்தும் சில வார்த்தைகளை இந்த உரையாடலில் கொண்டு வரக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • எங்கே, என்ன பேச சென்றாலும், முன்னரே அங்கே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை தயார்படுத்தி கொள்ளுங்கள். அப்போது உங்களால் அந்த சூழலை நம்பிக்கையோடு அணுக முடியும்.

  • கம்யூனிகேசன் திறனில் பதற்றம் இல்லாமல் இருப்பது மிக மிக அவசியம். ஒருவரிடம் பேசும்போது, தன்னம்பிக்கையுடன் நேராக பாருங்கள். அதுவே உங்களை ஆசுவாசப்படுத்தும்.

  • கம்யூனிகேசன் திறனில் பேசுவது மட்டுமல்லாமல், உங்கள் உடல்மொழியும் அடங்கும். நீங்கள் பேசும்போது, உங்கள் உடல்மொழி எப்படி இருக்கிறது என்பதை கவனித்து, அதை மெருகேற்றுங்கள். காரணம், உங்கள் பேச்சு மட்டுமல்லாமல், உங்களது கம்யூனிகேசன் திறனும் எதிரில் இருப்பவர்களுக்கு கம்போர்ட் தரும்.

  • உங்கள் பேச்சில் இலக்கண பிழை எதாவது இருந்தால், பரவாயில்லை. அது வெறும் பிழை மட்டுமே. அதை போக போக சரி செய்யுங்கள். இதற்காக, உங்கள் கம்யூனிகேசனை நிறுத்திவிடாதீர்கள். அது இல்லாமல் பேசுவது எப்படி என்பதை நோக்கி நகருங்கள்.

ஹேப்பி கம்யூனிகேசன் மக்களே:)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.