நண்பர்களுக்குள் வாய் தகராறு; ரௌடியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர் - கரூர் அதிர்ச்சி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டையில் பெயின்டரான சுரேஷ் என்பவருக்கு இரவு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ், அவரது நண்பரான பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி சந்தோஷ் குமார், மற்றொரு சந்தோஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனனர். அப்பொழுது, எல்லோருக்கும் மது விருந்து நடந்துள்ளது.

அதில், சந்தோஷ் குமாருக்கும், பிரகாஷூக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு மது போதையில் இருந்ததால் பீர் பாட்டிலால் பிரகாஷை, சந்தோஷ் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. சந்தோஷ் குமார் தாக்கியதில் பிரகாஷூக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, அவருக்கு முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் அவர் வீடு திரும்பிஇருக்கிறார். ஆனால், கோபத்துடன் இருந்த பிரகாஷ், கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள குழந்தை இயேசு பள்ளியில் அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை, தனது நண்பர்களுடன் இணைந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பிரகாஷை மடக்கிப பிடித்த அக்கம் பக்கத்தினர், பசுபதி பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தநர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த போலீஸார் சந்தோஷ் குமார் உடலை மீட்டு  உடற்கூராய்வுகாக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

santhosh kumar

அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் சந்தோஷ் குமார் உறவினர்கள் காந்திகிராம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இந்த நிலையில் சந்தோஷ் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே இளைஞர் ஒருவர் மது போதையில் தனது உயிர் நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.