விமானப் பயணத்தில் `பவர் பேங்க் எடுத்துச் செல்ல தடை ஏன் தெரியுமா?
ஏர்லைஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பல பொருள்களை பயணிகள் எடுத்துச்செல்லவும் தடைவிதிக்கிறது,
லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எளிதில் எரியக்கூடிய பொருள்கள் மற்றும் கூர்மையான பொருள்கள் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பவர் பேங்க்கும் அடங்கும்.
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது உடைமைகளுடன் பவர் பேங்க் எடுத்துச் செல்ல எதற்காக தடை விதிக்கின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பல ஆண்டுகளாக விமான பயணிகள் செக் இன் உடைமைகளுடன் பவர் பேங்க்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பவர் பேங்க்களில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
இந்த பேட்டரிகள் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனாலே சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தில் எந்தவித லித்தியம் அயன் பேட்டரிகளை கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தியது.
பல பவர் பேங்க்கள் அதிக வெப்பமாகும் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் பல விமான நிறுவனங்கள் அதை தடை செய்தது. அதாவது அதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

குப்பை கிடங்கு மற்றும் கழிகளை அகற்றும் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 700-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் இதனால் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் சேவைகள் சங்கம் 2002 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
இதில் பெரும்பாலானவை தூக்கி வீசப்படும் லித்தியம் பேட்டரிகளால் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
லித்தியம் அயன் பேட்டரிகள் சேதமடைந்தாலும் அல்லது உடைந்தாலும் வெடிக்கக்கூடும். இந்த பேட்டரிகள் பவர் பேங்க்களில் மட்டுமல்லாது பொம்மைகள், மொபைல் போன்கள் மடிக்கணினிகள் என பலவற்றுகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


