Doctor Vikatan: கர்ப்பிணிக்கு எந்த மாதம் வயிறு தெரியும்; வயிற்றைப் பார்த்து பாலினம் சொல்ல முடியுமா?
Doctor Vikatan: என் வயது 27. மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு இன்னும் வயிறு தெரிய ஆரம்பிக்கவில்லை. மூணு மாசமாகியும் வயிற தெரியலையே... என பலரும் விசாரிப்பது கவலையைத் தருகிறது. கர்ப்பத்தின் எந்த மாதத்தில் வயிறு தெரிய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
கர்ப்பமாகி மூணு- நாலு மாசங்களுக்கு மேலாகுது... ஆனாலும், வயிறே தெரியலையே என்று கவலையோடு மருத்துவரிடம் கேட்கும் கர்ப்பிணிகள் பலர். கர்ப்பத்தின் 3 முதல் 5 மாதங்களில்தான் வயிறு தெரிய ஆரம்பிக்கும். எல்லா கர்ப்பிணிகளுக்கும் அப்படித்தான் தெரிய வேண்டும் என்றும் அவசியமில்லை. அது ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் சில விஷயங்களைப் பொறுத்து மாறுபடும்.
உங்கள் உடல் எடை எவ்வளவு, உயரம் என்ன, முதல்முறை கர்ப்பம் சுமப்பவரா, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமப்பவரா, உங்கள் கர்ப்பப்பையின் பொசிஷன் எப்படியிருக்கிறது என பல விஷயங்களைப் பொறுத்தே வயிறு தெரிவது தீர்மானிக்கப்படும்.
முதல்முறை கர்ப்பம் தரித்தவர் என்றால், அந்தப் பெண்ணுக்கு வயிற்றுத் தசைகள் ஸ்ட்ராங்காக இருக்கும். அதனால் வயிறு தெரிவதில் சற்று தாமதமாகலாம். அதாவது 4வது மாதம் (16 வாரங்கள்) வயிறு தெரிய ஆரம்பிக்கும். 5-ம் மாதம், 6-ம் மாதங்களில் அது இன்னும் நன்றாகத் தெரியத் தொடங்கும். அதுவே இரண்டாவது, மூன்றாவது முறை கர்ப்பம் தரித்திருப்பவர், உடல் பருமனுடன் இருப்பவர் என்றால் ஏற்கெனவே கர்ப்பப்பை விரிவடைந்திருக்கும். அவர்களுக்கு வயிறு முன்னரே தெரிய ஆரம்பிக்கும்.

இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகளைச் சுமப்பவர் என்றால் மூன்றாவது மாதமே, ஐந்து மாதங்களில் இருப்பதுபோல வயிறு தெரிய ஆரம்பிக்கும். வயிறு தெரியும் அளவை வைத்து, குழந்தையின் அளவைக் கணிப்பது சாத்தியமில்லை. ஐந்தாம் மாதத்தில் மகப்பேறு மருத்துவர் கர்ப்பிணியைப் பரிசோதிக்கும்போது அந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பார்ப்பார். அதைவைத்து குழந்தையின் வளர்ச்சியை ஓரளவு கணித்துச் சொல்வார். ஐந்தாவது மாதத்துக்குப் பிறகு எட்டாவது மாதத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கும் குரோத் ஸ்கேன் (Growth Scan) எடுக்கப்படும். அதுவரை குழந்தையின் வளர்ச்சியை மருத்துவப் பரிசோதனையை வைத்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.
வயிற்றின் அளவையோ, அமைப்பையோ வைத்து குழந்தையின் பாலினத்தைச் சொல்வதும் சாத்தியமில்லை. அது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படாதது. எனவே, முதல்முறை கர்ப்பம் சுமப்பவராக இருந்து, வயிறு தெரியவில்லை என்றால் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

