கேரளா : மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம், ஆனால் இந்தியை..! - உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் - தர்மேந்திர பிரதான்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆர்.பிந்து, "மாணவர்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முக்கியமாக வெளிநாட்டு மொழிகளையும் நமது மாணவர்கள் கற்க வேண்டும். எனவேதான் மொழிகளுக்களுக்கான உயர் திறன் மையத்தை கேரளத்தில் நிறுவியுள்ளோம்.

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். அனைத்து மொழிகள் இடையேயும் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். பிற மொழிகளை ஏற்றுக்கொள்வது, மொழிகளுடன் இணைந்து செயல்படுவது கேரள கலாசாரத்தின் ஒரு பகுதியாக தொடக்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து

பல அயல்மொழிகளையும் கேரளம் ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது கேரள மாணவர்களிடையே மலையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மொழிகளைக் கற்க ஊக்கமளித்து வருகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.