Career: இனி ரெஸ்யூம் வேண்டாம்! சொல்லும் நிறுவனங்கள்; அதற்கு மாற்று என்ன?

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டுமானால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் சி.வி (Curriculum Vitae) கொடுத்துக்கொண்டிருந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக ரெஸ்யூம் கொடுத்து வந்தோம். இப்போது டிரெண்ட் மாறிவிட்டது... இப்போது வேலைக்குச் சேர வேண்டுமானால் பெரும்பாலான நிறுவனங்கள், உங்க லிங்க்ட் இன் புரொபைல் அனுப்புங்க என்று கூறுகிறார்கள். அதனால், அதற்கேற்ப அப்டேட் ஆகிக்கொள்வது அவசியம்.

லிங்க்ட் இன் என்பது ஒரு ஆப். இந்த ஆப் மூலம் நாம் வேலை தேடலாம்... நம்முடைய வேலை மற்றும் புரொபைல் பிடித்திருந்தால், எதாவது நிறுவனம் நமக்கு வேலை கொடுக்கலாம். இதே மாதிரியான ஆப்கள் பல சந்தையில் உள்ளன. ஆனால், லிங்க்ட் இன் மீதான நம்பகத்தன்மை தான் சந்தையில் அதிகம்.

ஒன்று... இரண்டு... மூன்று...

ஒன்று லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக இருப்பவர்கள், இரண்டு லிங்க்ட் இன் கணக்கு இருக்கும்... ஆனால், அதை பயன்படுத்தமாட்டார்கள், மூன்று லிங்க்ட் இன் கணக்கே இல்லாதவர்கள். இதில் இரண்டாமவர்கள் லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக மாற வேண்டும். மூன்றாமவர்கள் லிங்க்ட் இன் கணக்கு தொடங்கி, அதில் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

கணக்கு தானே ஆரம்பிக்க வேண்டும் என்று அத்தோடு நின்றுவிடக்கூடாது. லிங்க்ட் இன் புரொபைலில் சுய விவரங்கள், படிப்பு, ஸ்கில் என அனைத்தையும் பக்காவாக பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, உங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், உங்கள் துறையில் இருக்கும் பிரபலமான ஆட்கள் அவர்களுடன் கனெக்‌ஷன் கொடுங்கள்.

நீங்கள் புதிதாக எதாவது படித்தாலோ, கற்றுக்கொண்டாலோ, அதைத் தொடர்ந்து அப்டேட் செய்யுங்கள். வேலையில் ஏதாவது அப்டேட் இருந்தால் அதையும் மறக்காமல் பதிவிட்டுவிடுங்கள்.

இவற்றைத் தொடர்ந்து செய்யும்போது, உங்களுடைய ஒவ்வொரு பணி நிமித்தமான நகர்வுகளும் பதிவாகிவிடும். அதனால், நீங்கள் பணிக்கு விண்ணப்பித்து லிங்க்ட் இன் புரொபைலை அனுப்பும்போது, உங்களுடைய எந்த அப்டேட்டுகளும் மிஸ் ஆகாது.

இவர்கள் மட்டுமல்ல; நீங்களும் தான்...

இது வேலைக்குச் சேரும்போது தான் லிங்க்ட் இன் புரொபைல் உதவும் என்றில்லை. ஏற்கெனவே வேலையில் இருந்தாலும், லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக இருக்கும்போது, உங்களுடைய துறையில் இருக்கும் சக நண்பர்களுடன் நல்ல நட்பு ஏற்படும். இது நிச்சயம் உங்கள் கரியருக்கு உதவும்.

ஹேப்பி நெட்வொர்க்கிங்:)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.