புதன்கிழமை பெருமாள் வழிபாடு

சனிக்கிழமை எந்த அளவுக்கு பெருமாள் வழிபாடு செய்வது உகந்ததோ, அதை விட பல மடங்கு அதிகப்படியான நன்மைகள் தரக்கூடிய வழிபாடுதான், புதன்கிழமை அன்று செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு. அதற்காக சனிக்கிழமை பெருமாளை கும்பிட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. புதன்கிழமை பெருமாளை இப்படி கும்பிட்டால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பிறக்கும்.

பிடித்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்க துவங்கும். அதாவது ஆசைப்பட்ட இந்த விஷயம் எனக்கு கிடைக்கவில்லை, என்று ஏதாவது ஒன்று கட்டாயம் மனிதர்களுடைய வாழ்க்கையில் இருக்கும். ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ, பெருமாளை, புதன்கிழமை எப்படி வழிபாடு செய்ய வேண்டும். ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

புதன்கிழமை பெருமாள் வழிபாடு

வெற்றிலை 4, கலிபாக்கு 2, வாழைப்பழம் 4, வசதிக்கு தகுந்தபடி மல்லிகைப்பூ, இந்த பொருட்களை எல்லாம் வாங்கி, ஒரு தாம்பூல தட்டில் வைத்து கூட ஒரு தேங்காயை வைத்து, பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். புதன்கிழமை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இந்த பரிகாரத்தை செய்யலாம். பெருமாளுக்கு இந்த தாம்பூலத்தை எல்லாம் கொடுத்து, உங்களுடைய பெயர், கோத்திரம், நட்சத்திரம், சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரது பெயரைச் சொல்லியும் அர்ச்சனை செய்யலாம் தவறு கிடையாது. இந்த வழிபாட்டை எவர் ஒருவர் மன நிறைவோடு செய்கிறீர்களோ, அவர்கள் வீட்டில் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய குடும்பத்திற்காக ஒரு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று, குடும்ப தலைவனோ, குடும்ப தலைவியோ, ஆசைப்பட்டால் அந்த ஆசையானது கூடிய விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் அல்லது உங்கள் சொந்த பந்தங்கள், உங்களுடைய அண்ணன் தம்பி யாரோ ஒருவருக்கு கஷ்டம் இருக்கிறது என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடைய கஷ்டமும் தீரும் என்பது நம்பிக்கை.

புதன்கிழமை இந்த வழிபாட்டை பெருமாள் கோவிலில் செய்து விட்டு, பெருமாள் கோவிலில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு வந்து, உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். பெருமாள் கோவிலில், துளசி இலைகள் பிரசாதமாக கொடுத்தால், அதைக் கொண்டு வந்து பூஜை அறையில் கொஞ்சம், உங்கள் வீட்டு பீரோவில் கொஞ்சம், நகை வைக்கும் பெட்டியில் கொஞ்சம், அந்த துளசி இலைகளை வைக்கும் போது, வீடு முழுவதும் அந்த பெருமாளின் அனுகிரகம் நிறைவாக இருக்கும். உங்களுடைய வீட்டில் கஷ்டம் என்பதே நெருங்காது.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை பிரதோஷம் மந்திரம்

வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பி, வீட்டில் இருக்கும் பெருமாளையும் புதன்கிழமை அன்று வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்பவர்கள் வீட்டிலேயே பெருமாளுக்கு வழிபாடு செய்யுங்கள். பெருமாளின் முன்பு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து வைத்து பூஜை செய்யலாம். மல்லிகை பூவை வாங்கி வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு சாத்தியும், இந்த வழிபாட்டை மேற்கொள்ள, உங்களுடைய நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். குடும்பம் சுபிட்சம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் புதன்கிழமை பெருமாள் வழிபாட்டை செய்து பலன் பெறவும்.

The post புதன்கிழமை பெருமாள் வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.