போலி வாக்காளர் அட்டை: எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல்களில் ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லியில் இதே போன்ற நடைமுறைகள் இருப்பதால், போலிகளை உருவாக்கித் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் வாக்காளர் பட்டியலைக் கையாண்டிருக்கிறது.

மோடி

தேர்தல் ஆணையமும் ஆட்சியில் இருக்கும் கட்சியும் இணைந்து, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, போலி வாக்காளர்களை உருவாக்குகிறார்கள். மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லியைத் தொடர்ந்து இப்போது வங்காளத்திலும் அதையே ஆரம்பித்துவிட்டார்கள்... தேர்தல் செயல்முறை நியாயமாக இல்லாவிட்டால்... ஒரே ஒரு கட்சி மட்டுமே தொடர்ந்து ஆட்சிக்கு வரும். அவர்கள் ஊழலைத்தான் செய்வார்கள்" என ஆம் ஆத்மி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மகாராஷ்டிராவில், கருப்பு - வெள்ளை வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன" என்றார்.

ராகுல் காந்தி

இதற்கிடையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தரமேந்திர பிரதானின் அநாகரீகப் பேச்சைக் கண்டித்து, தமிழ்நாடு எம்.பிக்கள் தொடர் முழக்கமெழுப்பினார். அதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``வாக்காளர் பட்டியல் குறித்த எதிர்க்கட்சிகளின் விவாத அழைப்புக்கு மோடி அரசு ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.