பி.எம்.டபிள்யூ காரை நடுரோட்டில் நிறுத்தி, சிறுநீர் கழித்த வாலிபர்... மது போதை காரணமா?

நாட்டில் வாகன நெருக்கடி அதிகமான நகரங்களில் புனேயும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகமுள்ள நகரமாக புனே விளங்குகிறது. புனேயில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக்கிறது. புனே எரவாடா பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் சந்திப்பில் காரில் வந்த ஒரு வாலிபர் செய்த காரியம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பி.எம்.டபிள்யூ காரில் வந்த அந்த வாலிபர் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார். காரில் இருந்து இறங்கியவுடன் அதே இடத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடுரோட்டில் சிறுநீர் கழித்தார். இதனை சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். சிறுநீர் கழித்த வாலிபர் அவர் வீடியோ எடுப்பதை பற்றி கவலைப்படாமல் சிறுநீர் கழித்து முடித்தவுடன் வீடியோ எடுத்தவரைப்பார்த்து புன்னகைத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அஹுஜா

வீடியோ எடுத்த வாலிபர் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இருக்கிறது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுநீர் கழித்த வாலிபருடன் காரில் பயணம் செய்தவரின் பெயர் பாக்யேஷ் ஓஸ்வால் என்று தெரிய வந்துள்ளது. சிறுநீர் கழித்த வாலிபர் பெயர் கெளரவ் அஹுஜா என்று தெரிய வந்துள்ளது. பாக்யேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுஜா தலைமறைவாகிவிட்டார். சம்பவத்தின் போது இருவரும் மது அருந்தி இருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

இதற்காக கைது செய்யப்பட்ட பாக்யேஷ் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். பிரச்னை பெரிதானவுடன் அஹுஜா நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு பேசிய வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் நான் பொது இடத்தில் சிறுநீர் கழித்தது தவறாகும். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் போலீஸில் சரணடைவேன். போலீஸ் துறையும், ஷிண்டே சாஹேப்பும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இன்று கராட் போலீஸ் நிலையத்தில் அஹுஜா சரணடைந்தார். அவரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.