Sleep Tourism: ஓய்வெடுப்பதற்காகப் பயணம் செய்கிறார்களா? ஸ்லீப் டூரிஸம் கான்செப்ட் நல்லதா?
அன்றாட வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து ஒரு பிரேக் எடுக்கப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது செல்லும் இடங்களில் உள்ள அழகையும், இயற்கையையும் ரசிக்காமல் அல்லது சாகசங்களில் ஈடுபடாமல், தூங்கி எழுகின்றனர். ஆம் படித்தது சரிதான். தூங்குவதற்காகவே சிலர் டூரிஸம் மேற்கொள்கின்றனர். இது தற்போது புது ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது பரபரப்பான வேலையிலிருந்தும், அன்றாட சலசலப்பிலிருந்தும், நகரப்புற வாழ்க்கையிலிருந்தும் சற்று ஓய்வெடுக்க, ஒரு அமைதியான சூழலைத் தேடுகின்றனர்.
அதன் பின்னர் அங்குச் சென்று நன்றாகத் தூங்கி எழுகின்றனர். தூங்குவதற்காகவே பயணம் மேற்கொள்கின்றனர் என்று கேட்டால் ஆமாம்! பயணம் செய்து ஓய்வெடுக்கின்றனர்.
வாரம் முழுக்க குறைவான நேரம் தூங்கி எழுந்து தங்களின் வேலைகளை மேற்கொள்கின்றனர். வார இறுதியில் மொத்தமாக ஓய்வெடுக்கின்றனர். இவ்வாறு வார இறுதியில் மட்டும் நன்றாக ஓய்வெடுப்பது நல்லதா என்று கேட்டால், மருத்துவ நிபுணர்கள் இல்லை என்றுதான் எச்சரிக்கின்றனர்.
அதாவது நகரப்புற மக்கள் தங்களது வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களால் தினமும் குறைவான நேரமே உறங்குகின்றனர். இது அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. இதனால் அவர்கள் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர்.
தினமும் நன்றாகத் தூங்குவதைத் தவிர்த்து விட்டு வார இறுதியில் இதற்காக நேரம் ஒதுக்குவது என்பது உடலுக்கு நல்லதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
2019-ல் இந்தியன் ஜர்னல் ஆப் ஸ்லீப் மெடிசன்னில் வெளியிட்ட ஒரு ஆய்வில், இந்த நாள்பட்ட தூக்கமின்மை என்பது நவீன சமூகத்தில் பொதுவானதாக மாறிவிட்டது. மக்கள் அதிக நேரம் வேலை செய்துவிட்டுக் குறைந்த நேரம் உறங்குகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்களிடம் அதிகரித்து வரும் தூக்கமின்மைக்கு நவீன வாழ்க்கை முறை, வேலை (அடிக்கடி பயணம், இரவு வேலை), குழந்தை வளர்ப்பு, மருந்து போன்ற பல்வேறு காரணங்களை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஏழு மணி நேரம் தானே தூங்க வேண்டும், என்று பலரும் நள்ளிரவு மூன்று மணிக்குத் தூங்கிவிட்டு காலை 10 மணிக்கு எழுகிறார்கள். ஆனால் மனித உடல் அப்படி இயங்குவதில்லை சரியான முறையில் தூங்கினால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ஸ்லீப் டூரிஸ்சம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
